MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • 'இந்த' ஐடியா மட்டும் தெரிஞ்சா விரைவில் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்திடலாம்!

'இந்த' ஐடியா மட்டும் தெரிஞ்சா விரைவில் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்திடலாம்!

Pongal 2025 House Cleaning Tips : இந்த ஆண்டு பொங்கலுக்கு உங்களுடைய வீட்டை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Kalai Selvi
Published : Jan 10 2025, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
pongal 2025 house cleaning tips in tamil

pongal 2025 house cleaning tips in tamil

ஜனவரி வந்தாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பொங்கல் பண்டிகை தான். பொங்கல் தமிழர்கள் விரும்பி கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். இத்தகைய சூழ்நிலையில், பலர் ஜனவரி தொடக்கத்திலேயே வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் பெண்களுக்கு தான் வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக வேலை செல்லும் பெண்களுக்கு பொங்கல் வேலையை செய்வது மிகப்பெரிய வேலையாகவே இருக்கும். 

25
pongal 2025 house cleaning tips in tamil

pongal 2025 house cleaning tips in tamil

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டை சுத்தம் செய்தால் கஷ்டமாக தான் இருக்கும் அதுவே நீங்கள் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒரு நாள் என்று உங்களது வீட்டை சுத்தம் செய்தால் பொங்கல் சமயத்தில் வீட்டை சுத்தம் செய்வது ரொம்ப இலகுவாக இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு உங்களது வீட்டை மிகவும் எளிதாக சுத்தம் செய்ய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே பொங்கல் வேலையை தொடங்குபவர்கள் இந்த டிப்ஸ்களை படித்தால் அவை நிச்சயம் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

35
pongal 2025 house cleaning tips in tamil

pongal 2025 house cleaning tips in tamil

முதலில் வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்து வைக்கவும். அதாவது கிச்சனில் உடைந்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள், பழைய டிரஸ், பூஜை அறையில் இருக்கும் உடைந்த சாமி படம் என மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று அனைத்தையும் தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  Pongal 2025 : இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!!

45
pongal 2025 house cleaning tips in tamil

pongal 2025 house cleaning tips in tamil

இதனை அடுத்து உங்கள் வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் என அனைத்திலிருந்து இருக்கும் திரைசீலையை கழற்றி துவைக்க போட்டு விடுங்கள். அடுத்ததாக வீட்டில் இருக்கும் ஒட்டடைகளை அடிக்கவும். பிறகு, வீட்டில் இருக்கும் சில்வர் பித்தளை பாத்திரங்கள் என அனைத்தையும் கழுவி காய வைத்து விடுங்களி. அதுபோல கிச்சனில் இருக்கும் மசாலா டப்பாக்களையும் கழுவி காய வைத்து விடுங்கள். அதில் இருக்கும் மசாலாக்களை கவரில் போட்டு வைத்து விடுங்கள்.

இதையும் படிங்க:  Pongal Pulli Kollam Designs 2025 : பொங்கலோ.. பொங்கல்.. வித விதமான புள்ளி கோலங்கள் டிசைன்கள் இதோ!

55
pongal 2025 house cleaning tips in tamil

pongal 2025 house cleaning tips in tamil

அடுத்ததாக நீங்கள் தினமும் உபயோகிக்கும் துணிகள், பெட்ஷீட், தலையணை உறை என அனைத்தையும் துவைத்து காய வைத்து எடுக்கவும். இறுதியாக வீட்டில் இருக்கும் அனைத்து அறைகளையும், முக்கியமாக பாத்ரூமையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து விடுங்கள். இவை எல்லாவற்றையும் நீங்கள் ஒரே நாளில் செய்து விட முடியாது. எனவே ஒவ்வொரு ஒவ்வொரு வேலைகளை செய்ய வேண்டும் என்று நீங்களே பிரித்து, அதன்படி செய்ய ஆரம்பிங்கள். இப்படி நீங்கள் பிளான் பண்ணி செய்தால் 3-4 நாட்களுக்குள் உங்களுடைய பொங்கல் வேலையை சுலபமாக முடித்து விடலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved