வீட்டில் பல்லிகள் தொல்லையா? அதை விரட்ட உதவும் எளிய டிப்ஸ் இதோ..
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பல்லிகளை எப்படி விரட்டுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..
பல்லிகள் இல்லாத வீடுகள் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவு எல்லோரின் வீடுகளிலும் இந்த பல்லி இருக்கும். அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் இருக்கும் பல்லி அவ்வப்போது அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
இந்த பல்லிகளை விரட்ட பல கெமிக்கல் கலந்த பொருட்கள் இருந்தாலும், அவை நமக்கும் தீங்கை ஏற்படுத்தும் என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பல்லிகளை எப்படி விரட்டுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
காபி பவுடர் : மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்று புகையிலை பொடியுடன் காபி தூளை கலந்து சிறு உருண்டைகளாக செய்து, பல்லி அதிகம் உள்ள இடங்களில் வைக்கவும்.
மிளகு ஸ்ப்ரே : மிளகின் வாசனையை பல்லிகள் தாங்காது. ஒரு ஸ்ப்ரே பாட்டில் தண்ணீரில் சிறிது மிளகு தூலை வீட்டின் சுவர்களில் தெளிக்கவும். இதனால் பல்லிகளை எளிதில் விரட்ட முடியும்.
onion
வெங்காயம் : வெங்காயத்தின் கடுமையான வாசனையை பல்லிகள் பொறுத்துக்கொள்ளாது. எனவே, உங்கள் வீட்டில் பல்லி இல்லாமல் இருக்க ஒவ்வொரு மூலையிலும் வெங்காயத் துண்டுகளை வைக்கவும் அல்லது வெங்காயத்தை மாலை போல் கட்டி தொங்கவிடலாம்.
பூண்டு : இதே போல் பூண்டு பற்களை சுவரில் தொங்கவிடுவது அல்லது பல்லிகள் அதிகம் உள்ள இடங்களில் பூண்டு வைப்பது பல்லிகளை விரட்டும்.
முட்டை ஓடுகள் : உங்கள் வீட்டின் மூலையில் முட்டை ஓடுகளை வைக்கவும், முட்டை ஓடுகளின் வாசனை பல்லிகளை விரட்ட உதவும். எனினும் அடிக்கடி அந்த முட்டை ஓடுகளை விரட்ட உதவும்.
பாச்சா உருண்டை : பாச்சா உருண்டை பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது. இதனை அடுப்புக்கு அடியில் அல்லது வீட்டின் மூலையில் அல்லது அலமாரியில் வைத்தால் பல்லிகள் வராது.