Holi 2025 : இதுக்காக தான் ஹோலி பண்டிகை கொண்டாடுறாங்களா? சுவாரசிய பின்னணி!!
ஹோலி பண்டிகை கொண்டாட என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதை இந்த பதிவில் ரத்தினச் சுருக்கமாக காணலாம்.

Holi Celebration 2025 : இந்துக்கள் கொண்டாடும் அழகியல் நிறைந்த வண்ணமயமான பண்டிகை என்றால் ஹோலியை தான் சொல்லவேண்டும். பனிக்காலம் முடிந்து கோடையை வரவேற்கும் வசந்த காலத்தில் தான் எப்போதும் இப்பண்டிகை கொண்டாடப்படும். இதற்கு சுவாரசியமான பின்னணியும் உண்டு.
உண்மையில் வசந்த காலம் என்பதே மேற்கத்திய வழக்கம் தான். அங்கு பனிக்காலம் தீவிரமாக இருக்கும். அதனால் வெயிலை 'வசந்தம்' என வரவேற்பார்கள். நம்மூரில் தான் அப்படியில்லையே! பனிக்காலமும் பகலில் வெயில் வாட்டி எடுத்துவிடும். ஆனால் வட இந்தியாவில் பனிக் காலம் கொஞ்சம் தீவிரம் காட்டும். பனி முடிந்து வெயில் வரும்போது நச்சுயிரி தொடர்பான சளிக்காய்ச்சல் வரும். இதை எதிர்க்கும் நோக்கில் ஹோலி பண்டிகையை கொண்டாடுகிறார்கள். ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணமயமான பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர்.
வட இந்திய மாநிலங்களில் ஹோலி பிரபலமான பண்டிகையாகும். ஹோலியை முன்னிட்டு ஒருவரையொருவர் சந்தித்து வாழ்த்துவதோடு வண்ணப் பொடிகள் தூவி, பொட்டு வைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பதிவில் ஹோலி பண்டிகை குறித்து மற்ற தகவல்களை காணலாம்.
இதையும் படிங்க: ரூ.1,199-க்கே விமானப் பயணம்! இண்டிகோ வழங்கும் சூப்பர் ஹோலி ஆஃபர்!
ஹோலி பண்டிகை 2025 எப்போது?
இந்தாண்டின் ஹோலி பண்டிகை மார்ச் மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
ஹோலியின் மறுபக்கம்;
ஹோலி பண்டிகை மக்களிடையே வர்க்கரீதியான பாகுபாட்டை மறக்க செய்கிறது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகளை மொத்தமாக மறந்து அனைவரும் ஒன்றாக இந்த பண்டிகையை கொண்டாடுவது இதன் தனிச்சிறப்பாகும்.
இதையும் படிங்க: வெறும் ரூ. 6,800-க்கா ஐபோன் 16? ஹோலி முன்னிட்டு பிளிப்கார்ட் அதிரடி ஆஃபர்!
- ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு முந்தைய நாள் ஹோலிகா தகனம் என்றொரு நிகழ்ச்சியை நடத்துவார்கள். இந்த நிகழ்ச்சியில் இனிப்பு பண்டங்களுடன் பூஜை நடக்கும். ஹோலி பண்டிகைக்கு முந்தின இரவு எட்டு மணிக்கு மேல் நடக்கும் இப்பூஜையில் மரக்கட்டைகளை அடுக்கி அதில் தீ மூட்டி அக்னி தேவனுக்கு தேங்காயுடன், தாம்பூலம் வைத்து பூஜை செய்வார்கள். இந்த தீயில் தேங்காயுடன் பூஜையில் வைத்த இனிப்புகளை போட்டுவிடுவார்கள்.
- ஹோலிகா தகனம் மற்றும் பக்த பிரகலாதன் உயிர்த்தெழுதலின் மகிழ்ச்சி ஆகியவை ஹோலி பண்டிகையை இன்னும் மகிழ்ச்சியாக மாற்றுகிறது. இந்த மகிழ்ச்சியை தான் ஹோலி! ஹோலி! என மக்கள் உரக்கக் கத்தி வெளிப்படுத்துவார்கள். அப்போது ஒருவருக்கொருவர் வண்ணங்கள் பூசி கொண்டாடுவார்கள். இந்த வண்ணப் பொடிகள் காற்றில் கலந்து உயரப் பறப்பது தேவர்களை மகிழ்விக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஹோலி வண்ணங்களின் பின்னணி:
முந்தைய காலங்களில் ஹோலியில் பயன்படுத்தப்படும் வண்ணங்களை ஆயிர்வேத மூலிகைகளில் இருந்து தயாரிப்பார்கள். அதில் வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம் ஆகியவை சேர்ப்பார்கள். இன்றைய காலகட்டங்களில் லாப நோக்கில் வியாபாரம் செய்யப்படும் வண்ணப் பொடிகளில் வெறும் செயற்கை பொருள்கள் தான் உள்ளன. ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் போது வெளியில் வாங்கி பூசப்படும் வண்ணங்களில் செயற்கை பொருட்கள் தான் அதிகம் கலந்து இருக்கும். இதனால் தோலுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். முடிந்தவரை இயற்கையான வண்ணப்பொடிகளை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது.