67 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் முகேஷ் அம்பானி! அவரின் டயட் சீக்ரெட் இதுதான்!
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, யோகா, தியானம் மற்றும் ஒழுங்கான உணவுப் பழக்கம் மூலம் தனது உடல் நலத்தை எவ்வாறு பராமரிக்கிறார் என்பதை அறிய இந்த பதிவைப் படியுங்கள்.
Mukesh Ambani
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது ஆடம்பர வாழ்க்கை முறைக்காக அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவுகள் மூலம் தனது உடலையும் ஃபிட்டாக வைத்திருக்கிறார். முகேஷ் அம்பானியின் உணவு முறை மற்றும் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
யோகா மற்றும் தியானத்துடன் தனது நாளைத் தொடங்குவது முதல் லேசான உணவைத் தேர்ந்தெடுப்பது வரை, ஆரோக்கியத்திற்கான அம்பானியின் அணுகுமுறை அவரது ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. முகேஷ் அம்பானி தனது நாளை யோகா மற்றும் தியானத்துடன் தொடங்குகிறார்.
Mukesh Ambani
தினமும் அதிகாலை 5:30 மணிக்கு எழுந்து யோகா மற்றும் தியானத்தில் முகேஷ் அம்பானி ஈடுபடுகிறார். சூரிய நமஸ்காரம் மற்றும் குறுகிய நடைப்பயணங்கள், அதைத் தொடர்ந்து தியானம் ஆகியவை அவரின் காலை உடற்பயிற்சியில் அடங்கும். அவர் தனது காலை வழக்கத்தை ஒருபோதும் தவிர்ப்பதில்லை, ஏனெனில் அது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க உதவுகிறது.
இந்த நடைமுறைகளை தனது அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், முகேஷ் அம்பானி அந்த நாளுக்கு ஒரு நேர்மறையான செயல்முறையை அமைத்து தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கிறார்.
Mukesh Ambani
முகேஷ் அம்பானி லேசான காலை உணவையே பெரும்பாலும் விரும்புகிறார். அதன்படி, பழங்கள், ஜூஸ் மற்றும் இட்லி-சாம்பார் ஆகியவற்றையே சாப்பிட விரும்புகிறார். நீதா அம்பானி ஒருமுறை அளித்த பேட்டியில், முகேஷ் அம்பானி ஒழுக்கமான உணவு முறையை கடைப்பிடிக்க விரும்புவதாகவும், வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உணவுக்காக வெளியே செல்வதாகவும் பகிர்ந்து கொண்டார். முகேஷ் அம்பானி முழு குடும்பத்துடன் வீட்டில் சமைத்த உணவை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியின் உணவுப் பழக்கம் நாள் முழுவதும் மாறாமல் இருக்கும், மதிய உணவு மற்றும் இரவு உணவு இரண்டிற்கும் பாரம்பரிய இந்திய உணவுகளையே அவர் சாப்பிடுகிறார். அதன்படி பருப்பு, சப்ஜி, அரிசி, சூப்கள் மற்றும் சாலட்களை உள்ளடக்கிய குஜராத்தி சமையல் பாணியை அவர் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார். தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க அவர் வீட்டில் சமைத்த உணவை விரும்புகிறார்.
Mukesh Ambani
முகேஷ் அம்பானி தனது அன்றாட வழக்கத்தில் மது அருந்தவே மாட்டாராம். பல ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு அதிபரராக இருக்கும் அவர் சமூக நிகழ்வுகள் அல்லது பொது நிகழ்ச்சிகளில் கூட மது அருந்துவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் முகேஷ் அம்பானி நொறுக்கு தீனிகளையும் முற்றிலும் தவிர்த்து வருகிறார். நொறுக்குத் தீனிகள் மற்றும் மதுபானங்களைத் தவிர்ப்பதும், முகேஷ் அம்பானியின் உடல் நலம் மற்றும் உடற்தகுதிக்குக் காரணம்.
Mukesh Ambani
பல பார்ட்டிகள் மற்றும் சமூக நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் கூட, முகேஷ் அம்பானி சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம். பொது இடங்களிலும் அவர் நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதைத் தவிர்க்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உறுதியான உணவுக் கட்டுப்பாடு, யோகா மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதன் மூலம் முகேஷ் அம்பானி தனது, 67 வயதில் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் தனது உடல் நலனை பராமரித்து வருகிறார்.