இந்த 5 பொருள் வீட்டில் இருந்தால்.. பணமும், நலமும் வந்து சேரும்!
சில பொருட்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் ஈர்க்கும் சக்தியைக் கொண்டுள்ளன, உங்கள் வீட்டை எதிர்மறை சக்திகள் மற்றும் துரதிர்ஷ்டத்திலிருந்து உங்கள் பாதுகாக்கின்றன. அந்த 5 பொருட்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
சிரிக்கும் புத்தர்
சிரிக்கும் புத்தர் சிலை உங்கள் வீட்டிற்கு பணத்தை ஈர்க்கும் மிகவும் பிரபலமான பொருட்களில் ஒன்றாகும். இது மகிழ்ச்சியையும் செழிப்பையும் குறிக்கிறது மற்றும் வீட்டிலிருந்து எதிர்மறை சக்தி மற்றும் மன அழுத்தத்தை நீக்குவதாக நம்பப்படுகிறது.
கண் திருஷ்டி
கண் திருஷ்டி வடிவிலான தாயத்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் எதிர்மறை சக்திகள் மற்றும் திருஷ்டியைத் தடுத்து நல்ல அதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
சிவப்பு உறை
இந்த பாரம்பரிய சீன சிவப்பு உறைகள் உங்கள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் நேர்மறையைத் தருவதாக சீன பழங்குடியினர் நம்புகின்றனர்.
பணம் செடி
பணம் செடி என்பது உங்கள் வீட்டில் இருந்தால் நிதிப்பிரச்சனைகளை நீங்கி நேர்மறை சக்தியையும் தரும் என்று நம்பப்படும் ஒருவகை தாவரமாகும்.
Dogs Crying at Night : இரவில் நாய் அழுதால் உயிர் பலி ஏற்படப்போவதன் அறிகுறியா? உண்மை என்ன?
அதிர்ஷ்ட மூங்கில்
இது ஒரு பிரபலமான ஃபெங் சுய் தாவரமாகும், இது நிதி, வெற்றி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. மூங்கில் தண்டுகளின் எண்ணிக்கை பல்வேறு வகையான அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.