- Home
- Gallery
- Dogs Crying at Night : இரவில் நாய் அழுதால் உயிர் பலி ஏற்படப்போவதன் அறிகுறியா? உண்மை என்ன?
Dogs Crying at Night : இரவில் நாய் அழுதால் உயிர் பலி ஏற்படப்போவதன் அறிகுறியா? உண்மை என்ன?
இரவில் நாய்கள் அழுவது பெரும்பாலும் மோசமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது, இது நோய், நிதி இழப்பு அல்லது எதிர்மறை ஆற்றல் போன்ற துரதிர்ஷ்டங்களைக் குறிக்கிறது.

Dogs
நாய் பைரவரின் அவதாரம் அல்லது வாயில் காவலர் தெய்வம் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் நாய் வளர்பதை விரும்புகிறார்கள். ஒரு நாய் இரவில் அழும் போது, அதை பெரியவர்கள் விரட்டுவதை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். இரவு நேரத்தில் நாய்கள் அழுவது மோசமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. நாய் அழுவதற்குப் பின்னால் உள்ள கெட்ட சகுனம் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
Dogs
இரவில் நாய் அழுவதற்கு காரணம் என்ன?
உங்கள் வீட்டிற்கு வெளியே அல்லது வாசலில் நாய் குரைத்தால். இது சில நோய்களைக் குறிக்கிறது. உங்கள் குடும்பத்தில் யாராவது ஒரு பெரிய நோயால் பாதிக்கப்படலாம். ஒரு நாய் இரவில் அழுதால், அது சில பெரிய துரதிர்ஷ்டங்களைக் குறிக்கிறது. அதனால் நாய் வீட்டுக்கு வெளியே அழக்கூடாது.
இதையும் படிங்க: சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லாதது போல... ஆண்களுக்கு அனுமதி இல்லாத 7 கோயில்கள் இவையே!
Dogs
நாய்கள் ஊளையிடுவது நிதி இழப்பைக் குறிக்கிறது. எதிர்காலத்தில் சில வேலைகளால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு செலவாகலாம். எந்த வீட்டிற்கு வெளியே நாய் அழுது கொண்டிருந்தாலும் சில கெட்ட செய்திகள் கேட்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வீட்டை சுற்றி எதிர்மறை ஆற்றல் இருந்தால்.. நாய்கள் அதை உணர்ந்து குரைக்க ஆரம்பிக்கும்.
இதையும் படிங்க: இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்! மாரடைப்பு வந்தா கண்களில் இதெல்லாம் தெரியுமாம்!
dog
வரவிருக்கும் இயற்கை நிகழ்வுகளை நாய்களால் முன்கூட்டியே உணர முடியும் என்றும் கூறப்படுகிறது. நிலநடுக்கம் போன்றவைகள் அதனால்தான் நாய்கள் முன்கூட்டியே அழத் தொடங்குகின்றன. சில நம்பிக்கைகளின்படி, நாய்கள் தங்களைச் சுற்றி சில தீய சக்திகள் இருக்கும்போது அதிகமாக அழுகின்றன. இதனால், சுற்றிலும் நாய்கள் அழுவதைப் பார்த்து மக்கள் அவற்றை விரட்டத் தொடங்குகின்றனர்.