Henna: தலைக்கு மருதாணி பயன்படுத்துறீங்களா? இதில் ஸ்லோ பாய்சன் இருக்காம்.! எச்சரிக்கை.!
Henna Side Effects for Hair : மருதாணி இயற்கையானது என கணக்கு வழக்கில்லாம தலைக்கு போடுறீங்களா? அப்போ உங்க முடிக்கு நீங்களே ஆபத்தை வரவழைக்கிறீங்கனு அர்த்தம். கெமிக்கல் டைகளை விட இது பாதுகாப்பானதுனு நினைக்கிறவங்களுக்கு ஒரு ஷாக்கிங் எச்சரிக்கை.

Henna Side Effects for Hair
கெமிக்கல் கலந்த ஹேர் டைகளை விட, இயற்கையான மருதாணி நல்லதுனு பலரும் நம்புறாங்க. ஆனா, நிபுணர்கள் ஒரு ஷாக்கிங் விஷயத்தைச் சொல்றாங்க. மருதாணி இயற்கையானதுதான், ஆனா அதை அடிக்கடி பயன்படுத்தினா, அதுவே மெதுவா முடிக்கு ஆபத்தா மாறும். அது எப்படி முடியை பாதிக்குது? அதுக்குப் பின்னால இருக்கிற அறிவியல் என்ன? முழுசா தெரிஞ்சுக்கலாம் வாங்க.

மருதாணியில் உள்ள வேதிப்பொருள்
மருதாணியில 'டானின்' (Tannin) என்ற ஒரு வேதிப்பொருள் இருக்கு. இதுதான் முடிக்கு அழகான சிவப்பு-பழுப்பு நிறத்தைக் கொடுக்குது. ஆனா, இந்த டானின் முடியோட இயற்கையான ஈரப்பதத்தையும், எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிடும். இதனால, நீங்க அடிக்கடி மருதாணி போடும்போது, முடி வறண்டு, வைக்கோல் மாதிரி ஆகிடும். ஈரப்பதம் இல்லாத முடி சீக்கிரமே உடைஞ்சு போகும்.
முடியின் தன்மையை மாற்றும் மருதாணி
மருதாணி போட்டதும் முடி அடர்த்தியா தெரியுதேனு பலரும் சந்தோஷப்படுவாங்க. ஆனா, இங்கதான் பிரச்சனையே இருக்கு. மருதாணி முடியோட உள்ளே போகாது. அது முடியைச் சுற்றி ஒரு தடிமனான லேயர் மாதிரி படிஞ்சிடும். இதனால முடி திக்கா தெரிஞ்சாலும், போகப்போக தன்னோட இயற்கையான மென்மையை இழந்துடும். குறிப்பா, சில்க் போன்ற முடி இருக்கிறவங்களுக்கு, மருதாணி போட்டா முடி சொரசொரப்பாகிடும்.
மருதாணியால் ஏற்படும் விளைவுகள்
மருதாணி ஒரு கண்டிஷனர்னு நாம நினைக்கிறோம். ஆனா, அதிகமா பயன்படுத்தினா ரிசல்ட் தலைகீழா இருக்கும். மருதாணி லேயர் தலையோட சருமத்துல படியும்போது, வேர்க்கால்களுக்குத் தேவையான ஆக்சிஜன், ஊட்டச்சத்து கிடைக்காது. இதனால, தலையின் சருமம் வறண்டு, வேர்க்கால்கள் பிடிப்பை இழந்து, முடி மெலிஞ்சு போய், அதிகமா கொட்ட ஆரம்பிக்கும்.
'கான்டாக்ட் டெர்மடிடிஸ்' பிரச்சனை
'இயற்கையானது, அதனால சைடு எஃபெக்ட்ஸ் இருக்காது'னு நினைக்கிறது பெரிய தப்பு. சிலருக்கு மருதாணியில இருக்கிற புரோட்டீன் ஒத்துக்காது. இதனால தலையில அரிப்பு, சிவந்து போறது, தடிப்புகள் வரலாம். சில சமயம், இது 'கான்டாக்ட் டெர்மடிடிஸ்' (Contact Dermatitis) என்ற தீவிர சரும அழற்சிக்குக் கூட காரணமாகலாம். அதனால, பேட்ச் டெஸ்ட் செய்யாம மருதாணி யூஸ் பண்றது ஆபத்து.
டை அடிக்க முடியாது
மருதாணியோட மிகப்பெரிய சைடு எஃபெக்ட் இதுதான். ஒரு தடவை மருதாணி போட்ட முடி மேல, வேற எந்த கெமிக்கல் கலரையும் ஏத்த முடியாது. மருதாணி போட்ட முடி மேல கெமிக்கல் டை அடிச்சா, அந்த கலர் உள்ள போகாது. இதனால, கலர் சரியா பிடிக்காது. அதுமட்டுமில்லாம, மருதாணியும் கெமிக்கலும் சேர்ந்து வித்தியாசமா பச்சை இல்லனா ஆரஞ்சு நிறத்துக்கு முடியை மாத்திடும். இதை சரி பண்றது ரொம்ப செலவாகும்.
மருதாணியை பயன்படுத்தும் முறை
மருதாணியை மொத்தமா நிறுத்தத் தேவையில்லை. ஆனா, பயன்படுத்துற முறையை மாத்திக்கணும். மாசத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு மாசத்துக்கு ஒருமுறை மட்டும் யூஸ் பண்ணுங்க. மருதாணி கலவையில தயிர், முட்டை வெள்ளைக்கரு, இல்லனா தேங்காய் எண்ணெய் சேருங்க. இது முடி வறண்டு போகாம பாத்துக்கும். மார்க்கெட்ல கிடைக்கிற 'இன்ஸ்டன்ட் மெஹந்தி' அல்லது 'பிளாக் மெஹந்தி'யில PPD என்ற ஆபத்தான கெமிக்கல் இருக்கு. எப்பவும் சுத்தமான மருதாணி இலை பொடியை மட்டும் பயன்படுத்துங்க.
கவனத்திற்கு:
எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான். மருதாணி இயற்கையானதுனாலும், உங்க முடியோட தன்மைக்கு ஏத்த மாதிரி அளவா பயன்படுத்துறது மூலமா முடியோட ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அழகுக்காக செய்யுற முயற்சி, உங்களை ஆபத்துல தள்ளாம பார்த்துக்கோங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

