MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Bedtime Drinks : இரவு தூக்கம் வரலையா? படுத்தவுடன் தூக்கம் சொக்கிட்டு வர தினமும் இதுல ஒன்னு குடிங்க..!

Bedtime Drinks : இரவு தூக்கம் வரலையா? படுத்தவுடன் தூக்கம் சொக்கிட்டு வர தினமும் இதுல ஒன்னு குடிங்க..!

இரவு தூங்க செல்வதற்கு முன் இந்த பானங்களில் ஒன்றை தினமும் குடிப்பதை பழக்கமாக்கி கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Aug 11 2025, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Best Drink Before Bed For Better Sleep
Image Credit : stockPhoto

Best Drink Before Bed For Better Sleep

இந்த நவீன காலத்துல பரபரப்பான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை, மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சினைகள் மக்களிடையே நாளுக்கு அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை தான். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் கேஜெட்டுகளுடன் தான் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களது தூக்கம் பெரிதும் பாதிப்படுகிறது. குறைவான தூக்கத்தால் நாள் முழுவதும் சோர்வாகவும், ஆற்றல் இன்றி மனசோர்வுடனும் இருப்பர். மேலும் நீங்கள் தினமும் சரியாக தூங்கவில்லை என்றால் பல உடல் உள்ள பிரச்சனைகள் ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரவு படுத்த உடனே தூக்கம் வருவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை தூங்க செல்வதற்கு முன் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கம் வரும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

25
சூடான பால்
Image Credit : Getty

சூடான பால்

இரவு படுத்தவுடனே தூக்கம் வருவதற்கு ஒரு கிளாஸ் பால் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் பாலில் இருக்கும் அமினோ அமிலம் செரோடோனின் ஆக மாறி மனதை ரிலாக்ஸ் செய்ய உதவும் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தை ஊக்குவிக்கும்.

Related Articles

Related image1
Food for Better Sleep : தூக்கம் வராமல் கஷ்டப்படுறீங்களா? இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்க
Related image2
Sleeping Disorder: 9 மணி நேரத்துக்கு மேல தூங்குற ஆளா நீங்க? இதை படியுங்க முதல்ல..!
35
பாதாம் பால்
Image Credit : others

பாதாம் பால்

பாதாமில் இருக்கும் மெக்னீசியம் தூக்கமின்மையை போக்க உதவும். எனவே தினமும் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் பாதாம் பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தூக்கம் சொக்கிட்டு வரும்.

45
வாழைப்பழம் மற்றும் பாதாம் ஸ்மூத்தி
Image Credit : stockPhoto

வாழைப்பழம் மற்றும் பாதாம் ஸ்மூத்தி

வாழைப்பழத்தில் மெக்னீசியம், டிரிட்டோபான் மெலடோனின் நிறைந்துள்ளதால், அவை தூக்கமின்மையிலிருந்து நிவாரணம் அளிக்கும். அதுபோல பாதாமில் மெக்னீசியம் நிறைந்துள்ளன. அதுவும் தூக்கமின்மை பிரச்சனையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் பாதாம் மற்றும் வாழைப்பழம் ஸ்மூத்தி குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

55
கெமோமில் டீ
Image Credit : our own

கெமோமில் டீ

கெமோமில் டீ தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே இரவு நிம்மதியான தூக்கம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Related Stories
Recommended image1
Food for Better Sleep : தூக்கம் வராமல் கஷ்டப்படுறீங்களா? இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்க
Recommended image2
Sleeping Disorder: 9 மணி நேரத்துக்கு மேல தூங்குற ஆளா நீங்க? இதை படியுங்க முதல்ல..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved