MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Dry grapes: வெறும் வயிற்றில் பாதம் மற்றும் உலர் திராட்சை சாப்பிடுவதால்...கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?

Dry grapes: வெறும் வயிற்றில் பாதம் மற்றும் உலர் திராட்சை சாப்பிடுவதால்...கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?

Dry grapes: இன்றைய பதிவில் பாதாம் மற்றும் உலர் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 17 2022, 10:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Dry grapes:

Dry grapes:

பாதாம் மற்றும் உலர் திராட்சை உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான நட்ஸ் வகையாகும். இவற்றை சும்மா சாப்பிட்டாலே பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளது. அதுவும் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றால் சமநிலையில் வைத்துக்கொள்ள பாதாம் மற்றும் திராட்சை உதவுகிறது.  மேலும், செரிமானத்திற்கு உதவுகிறது. சரும பொலிவு, மாதவிடாய் கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உதவியாக உள்ளது. 

மேலும் படிக்க...Brain Diet: குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் சூப்பர் 7 உணவுகள்..பெற்றோர்களே! கொடுக்க மிஸ் பண்ணீடாதீங்க..

26
Dry grapes:

Dry grapes:

பாதாம் மற்றும் திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள்:

பாதாம் மற்றும் திராட்சையை ஊறவைத்தோ, தோல் நீக்கியோ அல்லது அப்படியேயோ சாப்பிடலாம், பாதம் பருப்பின் சக்தியை முழுமையாக நீங்கள் பெற வேண்டுமாயின் அதனை தினமும் சாப்பிட வேண்டும். பாதாம் பருப்பு சாப்பிடுவது வீண் வாத மற்றும் பித்த தோஷங்களைப் போக்கும் என்று நம்பப்படுகிறது . பாதாம் பருப்புகளை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம்  உடல் பலவீனம், உடல் பருமன், நீரிழிவு நோயின் சில சிக்கல்களைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

36

உடல் எடை:

அதேசமயம், உடல் எடையை படிப்படியாக அதிகரிக்க ஆரோக்கியமான வழிகளில் ஒன்று பாதாம், திராட்சை போன்ற நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிடுவது தான். ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தபட்சம் 4 முதல் 6 பாதாம் மற்றும் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம்  அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற கருத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க..Rahu Peyarchi: ராகு, கேதுவின் நேரடி அருளால்...இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை திறக்கும்., உங்கள் ராசி இதுவா ?

46
Dry grapes:

Dry grapes:

சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்:   

ஆயுர்வேதத்தின் படி, தினமும் பாதாம் மற்றும் திராட்சை சாப்பிடுவது, உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கும், சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்துகிறது மற்றும் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 

56
Dry grapes:

Dry grapes:

இளநரை மற்றும் முடி உதிர்தல்:

பாதாம் மற்றும் திராட்சை சரும ஆரோக்கியத்திற்கு நல்லது மட்டுமல்ல, அவை முடிக்கும் உறுதியளிக்கிறது, இதனால் இளநரை மற்றும் முடி உதிர்தல் போன்றவை தடுக்கப்படுகிறது. 

 

66
Dry grapes:

Dry grapes:

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டுமா..?

நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த நினைத்தாலோ அவர்கள் தினமும் பாதாம் மற்றும் திராட்சை சாப்பிட வேண்டும்.  

நினைவாற்றல் அதிகரிக்க:

தினம் பாதாம் மற்றும் திராட்சை சாப்பிடும்போது உங்கள் நினைவாற்றலும் அதிகரிக்கிறது. பாதாம் சாப்பிடுவதன் மூலம் உங்கள் இனப்பெருக்க திசு மற்றும் அதன் செயல்பாட்டின் தன்மை அதிகரிக்கும்.மேலும் , புற்றுநோய் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனையை சரி செய்கிறது

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved