- Home
- Lifestyle
- Roasted Garlic: வறுத்த பூண்டில் இவ்வளவு பயனா...? ஆண்களுக்கு அந்த விஷயத்திற்கு சூப்பர் உணவாகும்...
Roasted Garlic: வறுத்த பூண்டில் இவ்வளவு பயனா...? ஆண்களுக்கு அந்த விஷயத்திற்கு சூப்பர் உணவாகும்...
Roasted Garlic: காலையில் வெறும் வயிற்றில் தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதற்கான ஆபத்து பெருமளவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றனர்.

நம்முடைய சமையல் அறையில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் உணவுகளில், பூண்டிற்கு முக்கிய இடம் உண்டு. காலையில் வெறும் வயிற்றில் தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதற்கான ஆபத்து பெருமளவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக, ஆண்களுக்கு பூண்டு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஏனெனில், சிறந்த உணவான பூண்டு ஆண்களுக்கு ஏற்படும் பல உடல்நல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.
குறிப்பாக ஆண்கள், வறுத்த பூண்டை சாப்பிடுவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம். வறுத்த பூண்டு ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரித்து, பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
வறுத்த பூண்டு வேண்டும் என்றால், பூண்டின் தோலை உரித்து சுத்தம் செய்து கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, 20 நிமிடங்கள் பூண்டு பல்லை நன்கு வதக்கவும். பின் சூடாறிய பின் 1-2 பூண்டு பற்களை நசுக்கி, 1 டீஸ்பூன் தேனில் கலந்து சாப்பிடவும்.
ஆண்களுக்கு உடலில் வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது என்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் இயல்பாகவே அதிகரிக்கிறது. வறுத்த பூண்டு உடலுக்கு சென்ற சில மணி நேரத்தில் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
பிறகு கெட்ட கொழுப்புகளை கரைத்து அதை வெளியேற்றி, இரத்த அளவை சீராக்க உதவுகிறது. இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் தடைபடாமல் இதயத்துக்கும் உடல் முழுவதும் துடிப்பாக செல்கிறது.
இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, கெட்ட கொழுப்புகள் குறைகின்றன. உடலில் சோர்வு நீங்கி அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. மேலும் எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது. குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.