Eating Dinner Benefits : எடை குறைப்பு முதல் இரவு சீக்கிரம் சாப்பிடுவதன் பல நன்மைகள்!
தினமும் 7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு முடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Eating Dinner Benefits
தற்போதைய காலத்தில் பலர் இரவு உணவை மிகவும் தாமதமாக சாப்பிடுகின்றனர். குறிப்பாக நள்ளிரவு தாண்டியும் பிரியாணி சாப்பிடுவது சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்த பழக்கம் மெல்ல மெல்ல ஆரோக்கியத்தை கெடுக்கும் தெரியுமா? நாம் எவ்வளவு சீக்கிரமாக இரவு உணவை முடிகிறமோ அவ்வளவு நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது.
நாம் தூங்குவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன், அதாவது 7 அல்லது 8 மணிக்குள் இரவு உணவை முடிக்க வேண்டும். இதனால் எடை குறைவது மட்டுமில்லாமல் பல உடல்நல பிரச்சினைகள் வருவதும் தடுக்கப்படும். சரி இப்போது இந்த பதிவில் தினமும் இரவு சீக்கிரமாகவே சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
சர்க்கரை நோய் அபாயம் குறையும்
ஆய்வுகளின்படி, இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு குறைவு. தாமதமாக சாப்பிட்டால், உங்கள் சர்க்கரை அளவு சமநிலையற்றதாகி, நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். எனவே, மாலை 7 மணிக்குள் சாப்பிடுங்கள்.
எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும்
இரவில் சீக்கிரம் சாப்பிடுவதால் அதிகப்படியான கலோரிகள் சாப்பிடுவதை குறைக்கும். தாமதமாக சாப்பிட்டால் செரிமானம் கடினமாகி, கொழுப்பு சேரும். முன்பு சாப்பிட்டால் 2-3 மணி நேரம் முன்பு சாப்பிட்டால்சாப்பிடுவதால் எடையை எளிதாக கட்டுப்படுத்தலாம். மேலும் உங்கள் ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்றமும் மேம்படும்.
இதய ஆரோக்கியம் மேம்படும் :
சீக்கிரம் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. சாப்பிட்ட பிறகு உடல் ஓய்வு நிலைக்குச் செல்லும். அப்போது உணவு முழுமையாக ஜீரணமாகி, இதயத்தின் மீதான அழுத்தம் குறைகிறது. இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்
தாமதமாக சாப்பிடுவது கல்லீரலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் சீக்கிரம் சாப்பிட்டால், உடலில் நச்சு நீக்கும் செயல்முறை சீராக வெளியேறும். இது கொழுப்பு கல்லீரல், சிரோசிஸ் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது :
சில ஆய்வுகளில், சீக்கிரம் சாப்பிடுவது மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது :
தூங்குவதற்கு முன் அதிகமாக சாப்பிடுவது தூக்கத்தை பாதிக்கும். இதன் விளைவாக நெஞ்செரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதுவே இரவு உணவே சீக்கிரமாக சாப்பிட்டால் செரிமானத்தை நிறைவு செய்து உடலை ஓய்வு நிலைக்கு தயார் படுத்தும். இதனால் இரவு நிம்மதியாக தூங்குவீர்கள்.