- Home
- Lifestyle
- Drumstick powder: முருங்கை பொடி சாப்பிடுவதால்...உடலுக்கு இவ்வளவு நன்மைகள் இருக்காம்..? மிஸ் பண்ணீடாதீங்க...
Drumstick powder: முருங்கை பொடி சாப்பிடுவதால்...உடலுக்கு இவ்வளவு நன்மைகள் இருக்காம்..? மிஸ் பண்ணீடாதீங்க...
Drumstick powder: முருங்கை இலையை பொடி செய்து தினமும் 1 டீஸ்புன் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

Drumstick powder
முருங்கை மரத்தின் தலை முதல் அடி வரை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்கும். இந்த மரத்தின் காய்கள் மற்றும் இலைகள் இரண்டும் பரவலாக உட்கொள்ளப்படுகின்றன. காய்களை நாம் குழம்பு, பொரியல் வைக்க பயன்படுத்தலாம். அதன் இலைகளை ரசம், பொரியல், சூப் என பல உணவுகளை தயாரிக்கவும் பயன்படுத்தலாம். தினமும் முருங்கைக் கீரையை வாங்கி அதை சுத்தம் செய்து பொரியல் செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடுவதற்கு சிரமம். இதை மருந்தாக நினைத்து தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டாலே பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Drumstick powder
முருங்கை இலையில் பல்வேறு ஊட்ட சத்துக்கள்:
முருங்கை இலைகளில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புரதங்கள், கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்ட சத்துக்கள் உள்ளடக்கியது. மேலும், அவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆக்ஸிஜனேற்றங்களும் நிறைந்துள்ளன.இது தவிர, இவற்றில் அதிக அளவு ஐசோதியோசயனேட்ஸ் என்ற ஊட்டச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
Drumstick powder
முருங்கை பொடியில் இருக்கும் மருத்துவ நன்மைகள்:
1. முருங்கைக்காய் பொடி நம்முடைய இரத்த ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. எனவே மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுறுசுறுப்பாகவும் அதிக ஆற்றலுடனும் செயல்பட உதவி செய்யும். முருங்கை பொடியில் உள்ள கால்சியம் உங்களுக்கு அதிக செரிமானத்தை கொடுக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. ஆரோக்கியமான குடல் செயல்பாட்டிற்கு உதவி செய்கிறது.
Drumstick powder
2. முருங்கை இலை பொடியில் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இருக்கிறது. இரத்த அழுத்த அளவைக் குறைத்து, ஆபத்தான இதய நோய்களைத் தடுக்கிறது. மேலும், இது உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமாவதை தடுத்து சருமத்தை ஆரோக்கியமாகவும் மினுமினுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
Drumstick powder
3. கல்லீரல் பிரச்சனைக்கு முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள்சிறந்த ஒன்றாகும். இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.
4. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் முருங்கை பொடி சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு கட்டுக்குள் வரும். ஏனெனில், இது உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் குளோக்கோஸை குறைக்கிறது.
Drumstick powder
5. முருங்கை இலையின் பொடியானது, அல்சைமர் நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும், மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதில் பொட்டாசியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நியாபக திறன் ஆகியவற்றை பாதுகாக்க உதவுகிறது.