- Home
- Lifestyle
- தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..
தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..
Pomegranate juice: தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Pomegranate lime juice
பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த மாதுளையை காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் செய்து குடித்தால், வயிற்று புண் ஆறும் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியம் தரும். எல்லா பழங்களுக்கும் நல்லது என்றாலும், ஒரு சில பழங்கள் மறற பழங்களை விட நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அந்த வரிசையில், மாதுளை இடம்பிடித்துள்ளது. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகை சுவைகள் உள்ளன.
Pomegranate lime juice
இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு வகை மாதுளையும் சக்தியளிக்கும். இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை ஜூஸ் சிறந்த பலனைத் தருகிறது.
பல்வேறு ஆரோக்கிய நன்மை கொண்ட மாதுளையை பழமாக சாப்பிடுவதற்கும், ஜூஸாக குடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? என்பதை இங்கே தெரிந்து வைத்து கொள்ளலாம்.
PomegranatPomegranate lime juice
இதயத்தைத் தூண்டுகிறது
மாதுளை ஜூஸைத் தொடர்ந்து குடித்து வந்தால், இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது. மேலும், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நீங்கள் நீரேற்றமாக உணர்தல்
தண்ணீர் குடிக்க உங்களுக்கு சங்கடமாக இருந்தால் மாதுளை உள்ளிட்ட பழங்களை ஜூஸாக்கி குடிக்கலாம். இதன்மூலம் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பது மட்டுமல்லாமல், உங்களை நீங்கள் நீரேற்றமாகவும் வைத்திருக்கலாம்.
Pomegranate lime juice
அழற்சி சரியாகும்
மாதுளை சாறு அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மாதுளை சாறு குடிப்பது நாள்பட்ட அழற்சிகளை சரி செய்ய உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் மூலம் தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டுள்ளது.
Pomegranate
டைப் 2 வகை சர்க்கரை நோய்:
மாதுளை ஜூஸ், செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.மேலும், வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது.
பெண்களுக்கு நல்லது:
மாதுளை ஜூஸை தொடர்ந்து 30 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Pomegranate
புற்றுநோய் ஆபத்து குறைவு
மாதுளை சாற்றில் அந்தோசயனின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இந்த ஆக்ஸிஜனேற்றத்தை உட்கொள்வது சில புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கலாம். மேலும், நினைவாற்றல் மேம்படுவதற்கு உதவும். எனவே, தினமும் மாதுளை சாறு உட்கொள்வது மூலம் உங்கள் ஆரோக்கியத்தில் பல அதிசயங்களைச் நிகழும். எனவே, தினமும் காலை வெறும் வயிற்றில், 1 டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்தால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உறுதி.