- Home
- Lifestyle
- சொட்டை விழுந்த இடத்தில் கொத்து கொத்தாக முடி வளர வேண்டுமா.? கவலை வேண்டாம்..! இந்த ஹேர் சீரம் ட்ரை பண்ணி பாருங்க
சொட்டை விழுந்த இடத்தில் கொத்து கொத்தாக முடி வளர வேண்டுமா.? கவலை வேண்டாம்..! இந்த ஹேர் சீரம் ட்ரை பண்ணி பாருங்க
Hair growth spray: சொட்டை விழுந்த இடத்தில் சீக்கிரம் வளர விருப்பமுள்ளவர்கள், பொடுகு தொல்லை, இளநரை பிரச்சனைக்கு இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள்.

முடி உதிர்தல் பிரச்சனை நம்மில் பலரும் எதிர்கொண்டு வருகிறோம். இதற்கு முக்கிய காரணமாக உணவு முறை, வாழ்கை முறை மாற்றம், மன அழுத்தம் போன்றவை அமைத்துள்ளது. முடி வளராமல் இருப்பதற்கும், முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்வதற்கு நாம் ஒரு ஹேர் ஸ்ப்ரே தயார் செய்ய போகின்றோம்.
இந்த ஹேர் ஸ்ப்ரே படும் இடத்தில் நிறைய முடி வளர்வது உறுதி. முடியின் வேர்க்கால்கள் வலிமையாக இல்லை, தலையில் அரிப்பு இருக்கிறது, பொடுகு தொல்லை, இளநரை, முடி கொட்டுகிறது போன்ற எல்லாவற்றிற்கும் இந்த குறிப்பை பின்பற்றலாம். சொட்டை விழுந்த இடத்தில் சீக்கிரம் வளர விருப்பமுள்ளவர்கள், இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
கிட்னி பீன்ஸ் - 1 கப்
கருஞ்சீரகம் 3 டீஸ்புன்
வெங்காயத்தின் தோல்கள் - 3
பூண்டு - 3
கிராம்பு - 1 டீஸ்புன்
செய்முறை விளக்கம்:
1. அதற்கு முதலில் டபுள் பீன்ஸ், கிட்னி பீன்ஸ் எபொருளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய நாள் இரவே பத்து பதினைந்து கிட்னி பீன்ஸை, 1/4 லிட்டர் அளவு தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்து விடுங்கள்.
2. அந்த பீன்ஸை ஊற வைத்த தண்ணீரை மட்டும் குறிப்புக்கு பயன்படுத்த வேண்டும். அந்த பீன்ஸ் தேவை என்றால், உணவிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
3. முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து பீன்ஸ் ஊற வைத்த தண்ணீரை ஊற்றி, அதில் கருஞ்சீரகம், வெங்காயத்தின் தோல்கள், பூண்டு, கிராம்பு உள்ளிட்ட எல்லா பொருட்களையும் போட்டு 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
4. பிறகு, இந்த தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் 7 லிருந்து 10 நாட்கள் கெட்டுப் போகாது.
5. தினமும் இந்த ஸ்ப்ரேவை, நீங்கள் செடிக்கு தண்ணீர் ஊற்றி விடுவது போல், எப்போது வேண்டுமானாலும் தலையில் அடித்துக் கொள்ளலாம் தவறில்லை.
6. வீட்டில் இருந்தால் இந்த ஸ்பிரேவை தலையில் அடித்துக் கொள்ளலாம், கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தலைக்கு குளித்து தான் ஆக வேண்டும் என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.