MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Hair Care: வறண்ட முடிக்கு 5 நிமிடத்தில் தீர்வு! கிச்சன்ல இருக்கும் இந்த பொருள் போதும்!

Hair Care: வறண்ட முடிக்கு 5 நிமிடத்தில் தீர்வு! கிச்சன்ல இருக்கும் இந்த பொருள் போதும்!

குளிர்காலத்தில் முடி உதிர்வதையும், வறண்டு போவதையும் தடுக்க, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யக்கூடிய சில எளிய டிப்ஸ் இங்கே. கிச்சன்ல கிடைக்கும் சில பொருட்கள் முடிக்கு ஈரப்பதம் அளித்து முடியை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 23 2026, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
கூடுதல் பராமரிப்பு அவசியம்.!

கூடுதல் பராமரிப்பு அவசியம்.!

குளிர்காலம் என்றாலே வறட்சிதான் நினைவுக்கு வரும். அதனால்தான் இந்தக் காலத்தில் கூந்தல் பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. குளிர்காலம் வந்தாலே வறட்சி அதிகரிக்கும். அதன் தாக்கம் சருமத்தைப் போலவே கூந்தலையும் பாதிக்கும். இதனால் முடி வறண்டு, சிக்கலாகி, அதிகமாக உதிரும். எனவே, இந்த பருவத்தில் கூந்தலுக்கு கூடுதல் பராமரிப்பு அவசியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
முடியை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க முடியும்.!

முடியை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க முடியும்.!

குளிர்காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவதால், முடி இயற்கையாகவே தனது ஈரப்பதத்தை இழக்கத் தொடங்குகிறது. அதே நேரத்தில், வெளியே நிலவும் கடும் குளிரும், வீட்டுக்குள் இருக்கும் வெப்பமான சூழலும் அடிக்கடி மாறி மாறி இருப்பதால், முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக முடி வறண்டு, பொலிவிழந்து, சிக்கலாகி, எளிதில் உடையும் நிலை ஏற்படலாம். சிலருக்கு பொடுகு, அரிப்பு மற்றும் அதிக முடி உதிர்வும் காணப்படலாம். எனவே, இந்த பருவத்தில் முடிக்கு போதிய ஈரப்பதம் கிடைக்க இயற்கை எண்ணெய்கள், ஹேர் மாஸ்க் மற்றும் சத்தான உணவுகளைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம். சரியான பராமரிப்பு இருந்தால், குளிர்காலத்திலும் முடியை ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க முடியும்.

39
வீட்டுவைத்திய டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.!

வீட்டுவைத்திய டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.!

குளிர்காலத்தில் முடி வறண்டு, சிக்கலாகி, அதிகமாக உதிர்வது பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை. இதற்கு விலையுயர்ந்த ஹேர் ட்ரீட்மென்ட்கள் அவசியமில்லை. வீட்டில் எளிதாகக் கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு முடிக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, அதன் மென்மையையும் பொலிவையும் மீட்டெடுக்கலாம். இந்தக் குளிர்காலத்தில் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் எளிய, பயனுள்ள வீட்டுவைத்திய டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

49
வாழைப்பழம் தரும் ஆரோக்கியம்.!

வாழைப்பழம் தரும் ஆரோக்கியம்.!

வாழைப்பழத்தில் வைட்டமின்கள் B6, C, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, கூந்தலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 1–2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை தலைமுடி மற்றும் தலையோட்டில் சமமாகத் தடவி 20–30 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பின்னர் மிதமான ஷாம்புவால் அலசினால், முடி மென்மையாகவும், ஈரப்பதத்துடனும், பளபளப்பாகவும் இருக்கும். தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் சிக்கல் குறைய உதவும்.

59
கோழிமுட்டை இருக்கா உங்க கிச்சன்ல.!

கோழிமுட்டை இருக்கா உங்க கிச்சன்ல.!

முட்டை, வறண்ட மற்றும் சேதமடைந்த முடியைப் பராமரிக்க உதவும் சிறந்த இயற்கை பொருட்களில் ஒன்றாகும். இதில் நிறைந்துள்ள புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்துகள் முடியின் வேர்களை வலுப்படுத்தி, மென்மையையும் பொலிவையும் அதிகரிக்க உதவுகின்றன. இரண்டு முட்டைகளின் மஞ்சள் கருவை எடுத்து, அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை தலைமுடி முழுவதும் தடவி 30 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பின்னர் மிதமான ஷாம்புவால் அலசினால், முடி மென்மையாகவும், ஈரப்பதத்துடனும், ஆரோக்கியமாகவும் காணப்படும். வாரத்திற்கு ஒரு முறை இந்த ஹேர் மாஸ்கைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

69
வலிமையாகவும், பளபளப்பாகவும் மாறும்.!

வலிமையாகவும், பளபளப்பாகவும் மாறும்.!

தயாரிக்கும் ஹேர் மாஸ்க், குளிர்காலத்தில் வறண்டு உயிரற்றதாக மாறும் முடிக்கு சிறந்த ஊட்டச்சத்தை வழங்கும். 3–4 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை லேசாக 8–10 விநாடிகள் சூடுபடுத்தி, அதனுடன் 4 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2–3 டீஸ்பூன் முட்டை மஞ்சள் கருவை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை தலையோட்டிலும் தலைமுடி முழுவதும் தடவி 2–3 மணி நேரம் ஊறவிடுங்கள். பின்னர் மிதமான ஷாம்புவால் அலசினால், முடி ஈரப்பதத்துடன் மென்மையாகவும், வலிமையாகவும், பளபளப்பாகவும் மாறும். வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

79
தயிர் இருந்தால் ஆரோக்கியம் உங்கள் வசம்.!

தயிர் இருந்தால் ஆரோக்கியம் உங்கள் வசம்.!

தயிர், முடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படும் சிறந்த வீட்டுவைத்தியப் பொருளாகும். இதில் உள்ள புரோட்டீன், கால்சியம் மற்றும் லாக்டிக் அமிலம், முடிக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, வறட்சியைக் குறைக்க உதவுகின்றன. தேவையான அளவு பசுமையான தயிரை எடுத்து, தலையோட்டில் இருந்து முடியின் நுனி வரை சமமாகத் தடவுங்கள். 30 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு, மிதமான ஷாம்புவால் நன்றாக அலசவும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முடி மென்மையாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் சிக்கல் பிரச்சினைகளும் குறைய உதவும்.

89
அட்டகாசம் செய்யும் ஆலிவ் எண்ணெய்.!

அட்டகாசம் செய்யும் ஆலிவ் எண்ணெய்.!

ஆலிவ் எண்ணெய், வைட்டமின் E மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இயற்கை எண்ணெயாகும். இது முடிக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, வறட்சி, உடைதல் மற்றும் சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. சிறிதளவு ஆலிவ் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி, தலையோட்டிலும் தலைமுடியிலும் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின்னர், வெந்நீரில் நனைத்து பிழிந்த டவலால் முடியை ஒரு மணி நேரம் சுற்றி வைத்திருங்கள். அதன் பிறகு மிதமான ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரால் அலசினால், முடி மென்மையாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். வாரத்திற்கு ஒருமுறை இதைச் செய்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

99
வெந்தயத்தொ எடுத்துக்கோ.! சந்தோஷமாய் குதிச்சிக்கோ.!

வெந்தயத்தொ எடுத்துக்கோ.! சந்தோஷமாய் குதிச்சிக்கோ.!

வெந்தயம், முடி உதிர்வைக் குறைத்து, வறண்ட கூந்தலுக்கு இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் சிறந்த பொருளாகும். 50 கிராம் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அதனுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் அல்லது ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து நைசாக அரைத்து பேஸ்ட் தயாரிக்கவும். இந்த கலவையை தலையோட்டிலும் தலைமுடி முழுவதும் தடவி 30–45 நிமிடங்கள் ஊறவிடுங்கள். பின்னர் மிதமான ஷாம்புவால் அலசினால், முடி மென்மையாகவும், வலிமையாகவும், பளபளப்பாகவும் மாறும். வாரத்திற்கு ஒருமுறை இந்த ஹேர் பேக்கைப் பயன்படுத்தினால், குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முடி உதிர்வு குறைய உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உலர்ந்த கூந்தலுக்கான ஹேர் மாஸ்க்
முடி உதிர்தல் தடுப்பு
குழாயில் முடி அடைப்பு
முடி வளர்ச்சி
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Milk in Pressure Cooker: சாதம், பருப்பு வைக்கும் குக்கரில் பால் காய்ச்சலாமா? பலரும் அறியாத உண்மை!
Recommended image2
Generational Curse: உங்கள் முன்னோர் செய்த துரோகம் உங்களை துரத்துதா? பரம்பரை சாபத்தை உடைப்பது எப்படி?
Recommended image3
முதலில் தாளிப்பு.. அடுத்து காய்கறி.. ஒரே குக்கரில் இப்படிச் செஞ்சா சாம்பார் சாதம் சுவை வேற லெவல்!
Related Stories
Recommended image1
Hair Growth: கூந்தல் வளர்ச்சி கிடுகிடுவென வளர நெல்லிக்காய் சாற்றுடன் கலக்க வேண்டிய 5 பொருட்கள்!
Recommended image2
Hair Fall: முடி கொட்டுதா? கவலைப்படாதீங்க! இதோ 6 சூப்பர் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved