MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Monsoon Garden: கிச்சன் கார்டன்.. மழைக்காலத்தில் மிக எளிதாக வளரும் 5 அத்தியாவசிய மூலிகைகள்!

Monsoon Garden: கிச்சன் கார்டன்.. மழைக்காலத்தில் மிக எளிதாக வளரும் 5 அத்தியாவசிய மூலிகைகள்!

Monsoon: இயற்கையான ஈரப்பதமும், இதமான சூழலும் செடிகள் வேர் பிடித்துச் செழித்து வளர மிகச்சிறந்த களம் அமைத்துக் கொடுக்கும். இதற்கு பெரிய தோட்டம் எல்லாம் தேவையில்லை. ஈஸியா வளர்க்கக்கூடிய 5 மூலிகை செடிகள்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 02 2026, 05:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சின்ன தொட்டிகளிலும் வளர்க்கலாம்
Image Credit : Getty

சின்ன தொட்டிகளிலும் வளர்க்கலாம்

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே செடி வளர்க்கும் ஆர்வம் வந்துவிடும். காற்றில் இருக்கும் இயற்கையான ஈரப்பதமும், இதமான சூழலும் செடிகள் வேர் பிடித்துச் செழித்து வளர மிகச்சிறந்த களம் அமைத்துக் கொடுக்கும். இதற்குப் பெரிய தோட்டம் எல்லாம் தேவையில்லை; உங்கள் வீட்டுப் பால்கனி, மொட்டை மாடி அல்லது ஜன்னல் ஓரத்திலிருக்கும் சிறிய தொட்டிகளிலேயே இந்த 5 மூலிகைச் செடிகளை மிக எளிதாக வளர்க்கலாம். இவை உங்கள் சமையலுக்குப் புதிய சுவையையும், ஆரோக்கியத்தையும் தருவதோடு உங்கள் வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
துளசி (Tulsi)
Image Credit : Getty

துளசி (Tulsi)

ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி. துளசி செடியின் விதைகள் மூலமாகவோ அல்லது சிறிய செடியாகவோ தொட்டியில் வைக்கலாம். மழைக்காலத்தில் தொட்டியில் தண்ணீர் தேங்காமல், 'டிரைனேஜ்' சரியாக இருந்தால் துளசி இலைகள் கருகாமல் செழித்து வளரும். மழைக்கால சளி, இருமலுக்குத் துளசி டீ மற்றும் கஷாயம் மிகச்சிறந்த வீட்டு வைத்தியமாகும்.

Related Articles

Related image1
Water Heater: உயிருக்கே ஆபத்தாகும் வாட்டர் ஹீட்டர் ராடு! குளிக்கும் போது நீங்கள் செய்யும் அந்த 6 தவறுகள்!
Related image2
Mutton Vs Sheep: மட்டன் பிரியர்களே? ஆடு Vs செம்மறி ஆட்டிறைச்சியில் எது பெஸ்ட்?
36
புதினா (Mint)
Image Credit : instagram

புதினா (Mint)

மழைக்காலத்தில் மிக வேகமாக வளரக்கூடிய ஒரு செடி என்றால் அது புதினா தான். இதற்கு அதிகப் பராமரிப்பு தேவையில்லை. கடையில் வாங்கும் புதினா கீரையின் தண்டுகளை மட்டும் மண்ணில் நட்டு வைத்தாலே போதும், மிக வேகமாகத் துளிர்விட்டு வளரும். லேசான வெயிலும், ஈரமான மண்ணும் இதற்கு போதுமானது. பிரெஷ்ஷான புதினா இலைகளைச் சட்னி, பிரியாணி, ராய்தா மற்றும் ஹெர்பல் டீ செய்யப் பயன்படுத்தலாம்.

Water Heater: உயிருக்கே ஆபத்தாகும் வாட்டர் ஹீட்டர் ராடு! குளிக்கும் போது நீங்கள் செய்யும் அந்த 6 தவறுகள்!

46
கற்பூரவள்ளி (Indian Borage)
Image Credit : pixabay

கற்பூரவள்ளி (Indian Borage)

சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு எளிமையான மூலிகைச் செடி. இந்தச் செடியின் ஒரு சிறிய தண்டை உடைத்து மண்ணில் நட்டாலே போதும், எந்த பராமரிப்பும் இல்லாமலேயே காடு போல வளர்ந்துவிடும். இதன் தடிமனான இலைகளில் ஏற்கனவே நீர்ச்சத்து இருப்பதால், இதற்கு அதிகத் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. மழைக் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, நெஞ்சுக்கட்டுக்கு இதன் சாறு மிகச்சிறந்த மருந்து.

56
கொத்தமல்லி (Coriander)
Image Credit : Getty

கொத்தமல்லி (Coriander)

தினசரி சமையலுக்கு அத்தியாவசியமான கொத்தமல்லியை மிகச் சிறிய டப்பாக்கள் அல்லது தொட்டிகளில் கூட வளர்த்துவிடலாம். சமையலறையில் இருக்கும் மல்லி விதைகளை லேசாக உடைத்து மண்ணில் தூவி, தினமும் லேசாகத் தண்ணீர் தெளித்து வந்தால் சில நாட்களிலேயே கொத்தமல்லி தழைத்து வளரும். தொட்டியில் தண்ணீர் தேங்கக் கூடாது என்பதில் மட்டும் கவனம் தேவை. சமையலின் சுவையைக் அள்ளிக்கொடுப்பது மட்டுமல்லாமல் உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்களையும் இது வழங்குகிறது.

66
லெமன் கிராஸ் (Lemongrass)
Image Credit : Getty

லெமன் கிராஸ் (Lemongrass)

மழைக்காலத்தில் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவும் ஒரு அற்புதமான மூலிகைச் செடி. இதற்கு சற்று ஈரப்பதமும், லேசான சூரிய வெளிச்சமும் தேவை. மழைக்காலக் காற்றில் இது மிகவும் வேகமாக வளரக்கூடியது. இதன் இலைகளைக் கொண்டு போடப்படும் 'லெமன் கிராஸ் டீ' உடலுக்கு அசாத்திய புத்துணர்வைத் தரும். மேலும், இதன் நறுமணம் வீட்டிற்குள் ஒரு இயற்கை எலக்ட்ரிக் ரூம் ஸ்பிரே போலச் செயல்படும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
தமிழ்நாடு மழை
துளசி செடி வழிபாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Health Tips: சாப்பிட்ட உடனே குளிக்கக் கூடாதா? காரணம் இதுதான்!
Recommended image2
Indian Food Ban: அட நம்ம ஊரு சமோசா, நெய் எல்லாம் வெளிநாட்டுல தடையா?
Recommended image3
Raisin Water: இந்த 5 பிரச்சினை இருக்கா? உலர்திராட்சை ஊறவைத்த தண்ணீர் உங்களுக்கு ஒரு வரம்!
Related Stories
Recommended image1
Water Heater: உயிருக்கே ஆபத்தாகும் வாட்டர் ஹீட்டர் ராடு! குளிக்கும் போது நீங்கள் செய்யும் அந்த 6 தவறுகள்!
Recommended image2
Mutton Vs Sheep: மட்டன் பிரியர்களே? ஆடு Vs செம்மறி ஆட்டிறைச்சியில் எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved