- Home
- Lifestyle
- Guru Peyarchi 2022: மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்..செல்வம் நிறையும்
Guru Peyarchi 2022: மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்..செல்வம் நிறையும்
Guru Peyarchi 2022 Palangal: மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி...செல்வம் மற்றும் செழிப்பையும் தரும் கிரகமான வியாழன் கிரகம், ஜூலை 29 முதல் தனது சொந்த ராசியான மீனத்தில் பின்னோக்கி நகரவுள்ளார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

guru peyarchi 2022
மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி 2022:
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் மாற்றம் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது நிலையை மாற்றிக் கொள்கிறது. முன்னதாக, வியாழன் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். அதற்கு அடுத்தப்படியாக, வியாழன் அல்லது குரு பகவான் ஜூலை 29 முதல் தனது சொந்த ராசியான மீனத்தில் வக்கிரமாவார். வியாழனின் இந்த பிற்போக்கு நிலையின் தாக்கத்தால் சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இருக்கும். குறிப்பாக குருவின் ராசி மாற்றம்இந்த நான்கு ராசிகளுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனெனில், பிற்போக்கு நிலையில் உள்ள குரு இந்த ராசிகளின் மீது தனது ஆசிகளைப் பொழிவார். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் காணலாம்.
guru peyarchi 2022
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் பிற்போக்கு நகர்வு பல்வேறு நன்மைகளை அள்ளி தரும். நிதி வளம் பெருகும். அதிக சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை கிடைக்கலாம். அல்லது, ஏற்கனவே உள்ள பணியில் இருப்பவருக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
guru peyarchi 2022
சிம்மம்:
சிம்மம் ராசிக்காரர்களுக்கு பிற்போக்கு நிலையில் உள்ள குரு பகவானால் சுப பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் முன்னேற்றம் அடைவார்கள். பணியிடத்தில் வெற்றிகள் கைகூடும், முன்னேற்றங்களை காண்பீர்கள். உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவிகள் கிடைக்கும். இந்த உதவிகளால் பல பயன்கள் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு வியாழனின் வக்ர நகர்வு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி உங்களை தேடி வரும். மகிழ்ச்சியான சூழல் நிலவும். இந்த நேரம் உங்களுக்கு பதவி உயர்வு இருக்கும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வரும். தடைபட்ட வேலைகள் நடந்து முடியும்.
guru peyarchi 2022
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு குரு அல்லது வியாழனின் பிற்போக்கு நகர்வு கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மைகளைத் தரும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.வேலை செய்பவர்களும் நன்மை அடைவார்கள். முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். செயல்பாடு அதிகரிக்கும், அது உங்களுக்குப் புகழைக் கொடுக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி உங்களை தேடி வரும். மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.