முடி உதிர்தலை குறைக்கவும், இள நரையை போக்கவும் உதவும் சீக்ரெட் இதுதான்!
வேகமான வாழ்க்கை முறையில் முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. சில எளிய வீட்டு வைத்தியங்கள் முடி பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்க முடியும். நெய், முடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
Ghee for Hair
மாறி வரும் வேகமான வாழ்க்கை முரையில் முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டியே நரைப்பது ஆகியவை பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிலர் வீட்டு வைத்தியத்தைப் பின்பற்றுகிறார்கள், சிலர் வணிக ரீதியாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலரோ முடி சிகிச்சையை எடுத்துக் கொள்கின்றனர். எனினும் இந்த ஹேர் ட்ரீட்மெண்டில் பல ரசாயனங்கள் கலப்பதால் பல ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படும்.
Ghee for Hair
இருப்பினும், சில எளிய வீட்டு வைத்தியங்களும் பயனுள்ள தீர்வுகளை வழங்க முடியும். தினமும் பயன்படுத்தப்படும் ஒரு சமையலறை பொருளே முடி பிரச்சனைகளில் இருந்து விரைவான நிவாரணம் அளிக்கும். முடி ஆரோக்கியமாக வளரவும், இள நரையை போக்கவும் உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Ghee for Hair
1 டீஸ்பூன் நெய்யை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும். அதை முடியில் தடவவும். சிறிது நேரம் ஊறவிட்டு, மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும்.
சிறிது நெய் எடுத்து சூடாக்கவும். 1 டீஸ்பூன் நெய்யை 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும். அதை உங்கள் தலைமுடியில் மசாஜ் செய்யவும். உங்கள் முடி மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வளரத் தொடங்கும்.
Ghee for Hair
கூந்தலில் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் நெய்யை பயன்படுத்தலாம். இதில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதை கூந்தலில் தடவினால் கூந்தல் மென்மையாக மாறும்.
நெய்யுடன் ஆம்லா சாறு கலந்து ஹேர் மாஸ்க் செய்யலாம். நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி, அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் நெய் சேர்க்கவும். இதனை முடியில் தடவுவது பலன் தரும்.
Ghee for Hair
வெங்காயச் சாற்றை நெய்யுடன் கலந்து மாஸ்க் செய்யலாம். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் நெய் சேர்க்கவும். பின்பு இந்த பேஸ்ட்டை முடிக்கு பயன்படுத்தினால் முடி உதர்வுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
Ghee for Hair
அதே போல் நெய், பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஹேர் மாஸ்க் செய்யலாம். ஒரு பாத்திரத்தில் நெய்யை எடுத்து அதனுடன் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேக் செய்யவும். வாரம் ஒருமுறை இதைப் பயன்படுத்தினால் முடி பிரச்சனைகள் குணமாகும்.
Ghee for Hair
நெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு மேக்ஸை உருவாக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய்யை எடுத்து அதில் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.