- Home
- Lifestyle
- Reheating Food Safety : உணவே 'விஷமாகும்' இந்த '5' உணவுகளை தவறி கூட மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடாதீங்க!
Reheating Food Safety : உணவே 'விஷமாகும்' இந்த '5' உணவுகளை தவறி கூட மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடாதீங்க!
இந்த பதிவில் எந்தெந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.

Reheating Food Safety
நம்மில் பலருக்கு ஆறிய உணவைச் சாப்பிடப் பிடிக்காது. அதனால் மீதமான உணவை சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் சூடான உணவுகளை மட்டுமே சாப்பிட விரும்புவோம். எனவே உணவே மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவோம். ஆனால் இப்படி உணவை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா? எந்த மாதிரியான உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாது? அதனால் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாது?
மீதமான சாதம், சாம்பார் போன்றவற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் உணவு விஷமாக மாற வாய்ப்புள்ளது. சூடுபடுத்தும்போது, உணவில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் அழிந்து, சில சேர்மங்கள் விஷமாக மாறும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்தினால் சத்துக்கள் அழிந்து, பாக்டீரியா வளரும். வேகவைத்த முட்டையை சூடுபடுத்தும்போது, அதிலுள்ள நைட்ரஜன் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக மாறக்கூடும்.
சிக்கன்
சிக்கனை மீண்டும் சூடுபடுத்தும்போது அதன் புரோட்டீன் அமைப்பு மாறி, ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். சமைத்த பிறகும் இருக்கும் பாக்டீரியா, மைக்ரோவேவில் சூடுபடுத்தும்போது இறைச்சி முழுவதும் பரவும்.
டீ
டீயை மீண்டும் சூடுபடுத்தினால் சுவை மாறி, அமிலத்தன்மையை உண்டாக்கும். காளான் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கீரையில் உள்ள நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாறி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

