- Home
- Lifestyle
- Piles Problem : மூலப் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை தொட்டுக் கூட பார்க்காதீங்க! பின்விளைவுகள் வரும்
Piles Problem : மூலப் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை தொட்டுக் கூட பார்க்காதீங்க! பின்விளைவுகள் வரும்
மூலநோய் பிரச்சனை இருக்கிறவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட்ட கூடாது என்று இங்கு காணலாம்.

Worst Foods For Piles
இந்த நவீன காலத்தில் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் மாறிவிட்டதால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்கிறோம் அவற்றில் ஒன்றுதான் மூல நோய். இந்த நோயானது ஆசனவாய் அருகே வலி, வீக்கம், இரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த மூல நோயால் வலி அதிகமாக இருக்கும் என்பதால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் உணவு விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பிரச்சனை இன்னும் மோசமாகும். இத்தகைய சூழ்நிலையில், மூலநோய் பிரச்சனை உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
டீ மற்றும் காபி
மூலநோய் பிரச்சனை உள்ளவர்கள் டீ காபி குடிக்கவே கூடாது. ஏனெனில் இந்த பானங்களில் காஃபின் உள்ளதால் அது நம் உடலிலிருந்து தண்ணீரை வெளியேற்றி நீரிழப்பை ஏற்படுத்திவிடும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை கூட வரலாம். மேலும் மலத்தை கடினமாக்கி மூலநோய் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் காஃபின் செரிமான மண்டலம் மற்றும் ஆசனவாய் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் தான் மூலநோய் உள்ளவர்கள் டீ, காபி குடிக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. வேண்டுமானால் மிதமாக எடுத்துக் கொள்ளலாம்.
காரமான உணவுகள்
மூல நோய் உள்ளவர்கள் மிளகாய், கரம் மசாலா, வெங்காயம், இஞ்சி போன்ற காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவை செரிமான அமைப்பை மேலும் எரிச்சலாக்கி ஆசனவாய் அருகே அரிப்பு, எரிச்சல், வலி, வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் அமிலத்தன்மை மற்றும் இரைப்பை பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே மூல நோய் உள்ளவர்கள் அதிக நார்ச்சத்தும் மற்றும் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிடுங்கள்.
வறுத்த உணவுகள்
வறுத்த உணவுகளில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் இது செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மேலும் மலத்தை கடினமாக்குவதால், குடல் இயக்கத்தின் போது ரத்தப்போக்கு வழி அதிகமாக ஏற்படும். இதனால் மூல நோயின் பிரச்சனை இன்னும் மோசமாகும்.
உப்பு
மூல நோய் உள்ளவர்கள் உணவில் உப்பு அதிகமாக சேர்க்கக்கூடாது இவை பிரச்சனையை மேலும் மோசமாக்கும். அதாவது ஆசனவாய் அருகே வலி அரிப்பு போன்ற பிரச்சினையை அதிகரிக்க செய்யும். அதுபோல மசாலா பொருட்களையும் உணவில் அதிகமாக பயன்படுத்தக் கூடாது. அவையும் மூல நோய் பிரச்சனையை மோசமாக்கும்.
இனிப்புகள்
இனிப்புகள் அதிகம் கொண்ட உணவுகளை மூல நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை செரிமான செயல்பாட்டை பாதித்து மலச்சிக்கல் பிரச்சனையை அதிகரிக்க செய்யும் மற்றும் ஆசன வாய் சுற்றி வீக்கத்தை அதிகரிக்கும். இதற்கு பதிலாக தேன் பழங்கள் போன்ற இயற்கை இனிப்புகளை சாப்பிடுவது நல்லது.