- Home
- Lifestyle
- Mutton: மட்டன் சாப்பிட்ட உடனே இதையெல்லாம் சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் நிபுணர்கள்.. முழு விவரம்!
Mutton: மட்டன் சாப்பிட்ட உடனே இதையெல்லாம் சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் நிபுணர்கள்.. முழு விவரம்!
Mutton: மட்டன் சாப்பிட்ட உடனே சில உணவுகளை சாப்பிடுவது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவை எந்தெந்த உணவுகள்? என்னென்ன உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மட்டன் சாப்பிட்ட உடனே இதையெல்லாம் சாப்பிடாதீங்க
அசைவம் என்றாலே பலருக்கும் கொள்ளைப் பிரியம் தான். ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் அல்லது மட்டன் வாசம் தூக்கும். சிலர் வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் கூட அசைவம் சாப்பிடுவார்கள். அதிலும் மட்டன் என்றால் பலருக்கும் மிகவும் பிடிக்கும். மட்டன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும், அதை சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள். ஆம், மட்டன் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
சாப்பிடும் உணவை பொறுத்தே ஆரோக்கியம்
பண்டிகை காலங்களில் வீடுகளில் அசைவம் சமைப்பது வழக்கம். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புரட்டாசி விரதம் இருந்து அசைவத்தை தவிர்த்தவர்கள் மீண்டும் சாப்பிடத் தொடங்குவார்கள். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேரும்போது வீட்டில் தடபுடலாக அசைவம் சமைப்பது இயல்பு. இந்த நேரத்தில் மக்கள் சில விஷயங்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். நாம் சாப்பிடும் உணவை பொறுத்துதான் நமது ஆரோக்கியம் இருக்கிறது. அதனால், எந்த உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அஜீரணம் போன்ற பல பிரச்சனைகள்
குறிப்பாக சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை சாப்பிடும்போது நாம் செய்யும் சிறு தவறுகள் கூட அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயுத் தொல்லை மற்றும் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். மட்டனில் புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. அதனால், இது செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும். இதனால்தான் மட்டன் சாப்பிட்ட உடனே சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அஜீரணம் போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.
பால், தயிர் அல்லது மோர்
சிலர் அசைவம் சாப்பிட்ட உடனே பால், தயிர் அல்லது மோர் குடிப்பார்கள். ஆனால், இது உடலுக்கு கொஞ்சமும் நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அசைவம் சாப்பிட்ட பிறகு இவற்றை குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும். மேலும், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் சருமத்தில் தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் வரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தேன்
மட்டன் சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல். தேன் பொதுவாகவே உடலில் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதை மட்டனுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலில் சூடு இன்னும் அதிகமாகும். இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படலாம். அதனால், மட்டன் சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதை உடனே நிறுத்தி விடுங்கள்.
இனிப்பு வகைகள்
அதுமட்டுமல்ல, மட்டன் சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் மற்றும் இனிப்பு வகைகளையும் சாப்பிடக் கூடாது. நாம் சாப்பிட்ட மட்டன் செரிமானம் ஆக நேரம் எடுக்கும் என்பதால், இவற்றை உடனே சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வந்து உங்களை பாடாய்ப்படுத்தும். அதனால், மட்டன் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, அதன் பிறகு உங்களுக்கு பிடித்ததை சாப்பிடலாம்.
மருத்துவர்கள், இரவு நேரத்தில் மட்டன் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறுகிறார்கள். மட்டன் சாப்பிட்ட பிறகு சரியான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். சாப்பிட்ட பிறகு வயிறு மிகவும் கனமாக இருப்பது போல் உணர்ந்தால், இஞ்சி அல்லது வெந்தயம் சேர்த்த கஷாயம் குடிக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

