- Home
- Lifestyle
- Health food: ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்...மறந்துபோய் கூட சாப்பிடவே கூடாதாம்..
Health food: ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்...மறந்துபோய் கூட சாப்பிடவே கூடாதாம்..
Health food: இன்றைய நவீன வாழ்கை முறையில், ஆரோக்கியமற்ற வாழ்கை முறை காரணமாக ஆண்-பெண் இருவரும் வித நோய்களால் தாக்கப்படுகிறோம். எனவே, ஒவ்வொருவரின் வாழ்கை முறையிலும் உணவு பட்டியல் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

sea food
இன்றைய நவீன காலகட்டத்தில் திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது.குறிப்பிட்ட சில உணவுகள் ஆண்கள் கட்டாயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், திருமணத்திற்கு பிறகு ஆண்கள் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.எனவே ஆண்கள் கட்டாயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன.
sea food
டிரான்ஸ் கொழுப்புகள்:
டிரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக,ஆண்களுக்கு டிரான்ஸ் கொழுப்புகள் விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும். மேலும், இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஸ்பானிஷ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்:
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை எடுத்துக் கொள்வது, ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது. இருப்பினும், சிக்கன் சாப்பிடுவதால் விந்தணு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
soya
சோயா உணவுகள்:
சோயா உணவுகள் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அதிகம் உள்ளன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை அதிகமாக உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். இது தொடர்பாக சமீபத்திய ஆய்வின் படி, விந்தணு குறையக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.
sea food
அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்கள்:
அதிக கொழுப்பு பால் பொருட்கள் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில், கொழுப்பு நீக்கப்படாத பால், கிரீம் மற்றும் சீஸ் போன்றவை காரணமாக விந்தணு குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது.
எனவே, அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம். எனவே, நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு முறையான உணவு பொருட்களை தேர்வு செய்வது அவசியம்.