- Home
- Lifestyle
- Weight Loss Tips: ஜிம்முக்கு போய் காசு வேஸ்ட் பண்ணாதீங்க.. ஈஸியா எடை குறைக்க 5 சூப்பர் டிப்ஸ்!
Weight Loss Tips: ஜிம்முக்கு போய் காசு வேஸ்ட் பண்ணாதீங்க.. ஈஸியா எடை குறைக்க 5 சூப்பர் டிப்ஸ்!
பலரும் உடல் பருமன் பிரச்சனையால் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் ஜிம்முக்குச் செல்ல நேரமில்லாமல், எப்படி எடையை குறைப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே சிம்பிள் டிப்ஸ்.

ஈஸியாக எடை குறைக்க 5 வழிகள்
தற்போதைய காலக்கட்டத்தில் லைஃப்ஸ்டைல், உணவுப் பழக்கம், உட்கார்ந்தே வேலை செய்வது போன்ற காரணங்களால் உடல் எடை கூடுவது சாதாரணமாகிவிட்டது. ஆனால், எல்லோருக்கும் ஜிம்முக்கு போக நேரம் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் இந்த சின்ன சின்ன பழக்கங்களை மாற்றிக்கொண்டால், வீட்டிலேயே சுலபமாக எடையைக் குறைக்கலாம். அது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்
எடை குறைக்க நினைப்பவர்கள் மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது ரொம்ப நல்லது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். அதனால், அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். தண்ணீர் குடிப்பது மெட்டபாலிசத்தையும் ஓரளவிற்கு அதிகரிக்கும். பல நேரங்களில் நமக்கு பசிப்பதாகத் தோன்றும் உணர்வு, உண்மையில் தாகமாக இருக்கலாம். அதனால் முதலில் தண்ணீர் குடிப்பது ஒரு நல்ல பழக்கம்.
50 சதவீதம் காய்கறிகள்
சாப்பிடும் உணவில் குறைந்தது 50% காய்கறிகள் எடுத்து கொள்ளுங்கள். காய்கறிகளில் கலோரிகள் குறைவு, ஆனால் நார்ச்சத்து அதிகம். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், வயிறு நிரம்பிய உணர்வு நீண்ட நேரம் இருக்கும். இதனால், இடையில் கண்டதை சாப்பிடும் ஆசை குறையும். மேலும், காய்கறிகள் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொடுக்கின்றன. இந்த டயட் மாற்றம் எடை குறைப்பதை எளிதாக்கும்.
15 நிமிடம் நடைப்பயிற்சி
சாப்பிட்ட உடனேயே ஒரு 15 நிமிடம் நடப்பது ரொம்ப நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவும். சாப்பிட்ட உடனே படுப்பது அல்லது உட்காருவது, உணவு கொழுப்பாக சேமிக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கும். ஆனால், லேசாக நடப்பதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும். தினமும் இந்த சின்ன பழக்கத்தைப் பின்பற்றினால், எடை குறைப்பில் நல்ல பலன் தெரியும்.
இவற்றைத் தவிர்ப்பது நல்லது
பழச்சாறுகள், ஸ்நாக்ஸ், காபி, டீ போன்றவற்றை குறைப்பது ரொம்ப முக்கியம். குறிப்பாக, பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ், ஸ்நாக்ஸ் சாப்பிடுவதால், நமக்கே தெரியாமல் அதிக கலோரிகள் உடலுக்குள் செல்கின்றன. காபி, டீ அதிகமாகக் குடித்தாலும் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகரிக்கும். இதற்கு பதிலாக தண்ணீர் அல்லது இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
ஸ்கிரீன் பார்த்து சாப்பிட வேண்டாம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

