- Home
- Lifestyle
- Kids Brain Development : பெற்றோரே!! குழந்தையின் 'மூளை' கூர்மையாக செயல்பட 5 விஷயங்கள் செய்யனும்!!
Kids Brain Development : பெற்றோரே!! குழந்தையின் 'மூளை' கூர்மையாக செயல்பட 5 விஷயங்கள் செய்யனும்!!
குழந்தையின் மூளையின் செயல்திறன் சிறப்பாக செயல்பட பெற்றோர் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.
குழந்தையின் மூளையின் செயல்திறன் சிறப்பாக செயல்பட
அனைத்து குழந்தைகளுக்கும் பிறக்கும்போது ஒரே மாதிரியானவர்கள் தான். குழந்தைகள் வளர வளர அவர்களுடைய சின்ன மூளையும் வளர்கிறது. அது கூர்மையாகவும், வலுவாகவும் மாறுகிறது. இதற்கென விலை உயர்ந்த பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சின்ன விஷயங்கள் போதும். இந்த பதிவில் அது குறித்து விரிவாக காணலாம்.
திரும்ப படித்தல்
உண்மையில் சலிப்பு தரும் விஷயங்களை திரும்பத் திரும்ப செய்ய தயாராக இருப்பவர்கள் தான் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். குழந்தைகளுக்கு எந்த ஒரு விஷயத்தையும் திரும்ப செய்யும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அதாவது ஒரு புத்தகத்தை ஒரு முறை படிப்பதுடன் நிறுத்தாமல் மீண்டும் மீண்டும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். படித்த புத்தகத்தை திரும்ப படிப்பதும், கேட்ட கதையை மீண்டும் கேட்பதும் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் மீண்டும் மீண்டும் சொல்லுவது மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும். அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும். புத்தகத்தின் புதிய கோணங்கள் தெரியும். அதனால் ஒரு கதையை குறைந்தபட்சம் 10 தடவையாவது படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் நடக்கும் மாற்றங்களை உணர வழிகாட்ட வேண்டும். மீண்டும் படிப்பதால் அவர்களுடைய சொற்களஞ்சியம் மேம்படுகிறது. நரம்பியல் இணைப்புகள் உறுதியாகின்றன.
சிந்தனை
குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவை குழந்தையின் மூளையை கூர்மையாக செயல்பட வைக்கின்றன. சில வீடுகளில் சாதாரணமாகவே குழந்தையின் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கும் செயல்பாடுகளை செய்து வருவார்கள். உதாரணமாக கதைகள் சொல்வதும் அதில் அடங்கும். கதைகள் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது. அவர்களுக்கு ஏன் எதற்கு என்ற கேள்விகளை விதைக்கிறது. கதை கேட்கும் போது குழந்தைகள் யோசிக்கிறார்கள்.
பேசுதல்
குழந்தைகளுடன் பேசுவது மிகவும் அவசியம். அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் போது அவர்களிடம் கவனமாக பேச வேண்டும். குழந்தைகளிடம் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுடைய மூளைக்கு உரமாகிறது. வீட்டில் எந்த ஒரு விஷயங்களை செய்யும் போதும் நீங்கள் பேசுவதை குழந்தைகள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் மூளையில் நீங்கள் நல்ல விஷயங்களை பதிவு செய்ய வேண்டும்.
வீட்டு வேலை
குழந்தைகள் விளையாடுவது அவர்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூளையின் செயல் திறனுக்கும் அவர்கள் விளையாட்டில் ஈடுபடுவது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் துணி மடிப்பது, மேசையை ஒழுங்கு செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற சிறு சிறு வீட்டு வேலைகளை குழந்தைகள் செய்யும் போது அவர்களுடைய மூளையின் செயல்பாடு மேம்படுவதாக கூறப்படுகிறது. பெரியவர்களைப் போல அவர்களாலும் வேலைகளை செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கிறது. வீட்டு வேலை செய்யும் குழந்தைகள் திட்டமிடுவதில் சிறந்தவர்களாகவும், கவனமாக செயல்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் நினைவாற்றல் மேம்படுவதற்கு காரணமான ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸ் தூண்டப்படுகிறது.
உணர்ச்சிகளை கையாளுதல்
குழந்தைகளிடம் ஒழுக்கத்தை ஊக்குவிக்க பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும். ஒருவேளை வீட்டில் ஏதேனும் ஒரு பொருள் காணாமல் போயிருக்கலாம். அந்த பொருளை அதிகமான டென்ஷனோடு தேடாமல் கவனமாகவும், நிதானமாகவும் தேடும்போது அதிலிருந்து உங்களுடைய குழந்தை கற்றுக் கொள்வார்கள். இது போன்ற விஷயங்கள் குழந்தைகளுக்கு உணர்ச்சிரீதியான சமநிலையை தருகிறது. தினசரி வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு தைரியத்தை கற்றுக் கொடுக்கிறது.