- Home
- Lifestyle
- Pressure Cooker : ஒரே குக்கரை ரொம்ப வருஷமா யூஸ் பண்றீங்களா? குழந்தைகளுக்கு ரொம்ப டேஞ்சர்!
Pressure Cooker : ஒரே குக்கரை ரொம்ப வருஷமா யூஸ் பண்றீங்களா? குழந்தைகளுக்கு ரொம்ப டேஞ்சர்!
ஒரே குக்கரை நீண்ட நாள் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Old Pressure Cooker Side Effects
குக்கர் உண்மையிலே ஒரு அதிசயமான கண்டுபிடிப்பு தான். ஏனெனில் இது சமையலை மிகவும் எளிதாக்கிவிடும். குக்கரில் எதையும் ஒரு சில நிமிடங்களிலேயே சமைத்து விட முடியும் என்பதால், மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரே குக்கரை நீண்ட நாள் பயன்படுத்தி உணவு சமைப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு இது அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம்.
பழைய குக்கர் ஏன் ஆபத்தானது?
பழைய குக்கரை தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வெளியேறும் ஈயம், அலுமினியம், கருப்பு நிற தடயங்கள் போன்றவை உணவில் கலந்துவிடும். அதிலும் குறிப்பாக, ஈயமானது நம் உடலில் கலந்துவிட்டால் அவ்வளவு எளிதாக உடலை விட்டு வெளியேறாது. மேலும் அது மூளை, இரத்தம், எலும்பு போன்ற உடல் உறுப்புகளில் படிந்து நினைவாற்றல் இழப்பு, மோசமான மனநிலை, நரம்பு பலவீனம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகள்
பழைய குக்கரின் பயன்பாடால் குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்களாம். அதிலிருந்து வெளியேறு ஈயமானது உணவில் நஞ்சாக கலந்து குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம். அதாவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடை அல்லது மெதுவாகும், கற்றல் சிரமம், அறிவாற்றல் குறையும் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே சிறு குழந்தைகள் இருக்கும் குடும்பங்கள் இது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
பெரியவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும்?
நீடித்த சோர்வு, எரிச்சல், மோசமான மனநிலை மாற்றம், இரத்த அழுத்தம் அதிகரிப்பு, சிறுநீரக பாதிப்பு, நினைவாற்றல் குறைவு போன்றவை ஏற்படும்.
எப்படி கண்டுப்பிடிப்பது?
நீங்கள் பயன்படுத்தும் குக்கரில் சிராய்ப்புகள், கருப்பு புள்ளிகள் கண்டாலோ, விசில் அல்லது மூடி தளர்வாக இருந்தாலோ, குக்கரில் ஒரு விதமான வாசனை அல்லது சமைத்த உணவில் உலோகங்கள் வாசனை வந்தால் உடனே அதை தூக்கிப்போட்டு புது குக்கரை பயன்படுத்துங்கள்.
எப்போது மாத்தணும்?
நீங்கள் பயன்படுத்தும் குக்கர் எவ்வளவு நன்றாக வேலை செய்தாலும் 10 ஆண்டுகள் ஆகிட்டா? அப்போ அதை கண்டிப்பாக மாற்றுவது தான் நல்லது. மசாலா பொருட்கள் முதல் மருந்துகள் வரை என எல்லாவற்றிற்கும் ஒரு காலக்கெடு இருப்பது போல சமையல் பாத்திரங்களுக்கும் காலக்கெடு உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.