MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Eggless Mayonnaise: முட்டை இல்லாமலேயே சூப்பர் க்ரீமியான மயோனைஸ்! 6 பொருளில் வீட்டிலேயே செய்யலாம்

Eggless Mayonnaise: முட்டை இல்லாமலேயே சூப்பர் க்ரீமியான மயோனைஸ்! 6 பொருளில் வீட்டிலேயே செய்யலாம்

Homemade Eggless Mayonnaise Recipe in 5 Minutes:சாலட், சாண்ட்விச்-க்கு ஏற்ற க்ரீமியான எக்லெஸ் மயோனைஸை வெறும் 6 பொருட்களை வைத்து வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். இதோ ரெசிபி.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 20 2026, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எக்லெஸ் மயோனைஸ் செய்வது செம்ம ஈசி
Image Credit : Freepik

எக்லெஸ் மயோனைஸ் செய்வது செம்ம ஈசி

முட்டை சாப்பிடாதவர்களுக்கு இந்த எக்லெஸ் மயோனைஸ் ஒரு சூப்பர் சாய்ஸ். இதை செய்வது ரொம்ப சுலபம், குறைவான பொருட்களே போதும். இதன் சுவையும் முட்டை மயோனைஸ் போலவே அருமையாக இருக்கும். வீட்டிலேயே எக்லெஸ் மயோனைஸ் செய்வதற்கான எளிய வழிமுறைகள் இதோ.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தேவையான பொருட்கள்
Image Credit : Freepik

தேவையான பொருட்கள்

எக்லெஸ் மயோனைஸ் செய்ய, இந்த பொருட்களை தயாராக எடுத்துக்கொள்ளுங்கள்:எண்ணெய் (சமையல் அல்லது சூரியகாந்தி எண்ணெய்) - 1 கப்குளிர்ச்சியான பால் - 1/4 கப்வினிகர் அல்லது எலுமிச்சை சாறு - 1 ½ டீஸ்பூன்கடுகுப் பொடி - ½ டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுபொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்

Related Articles

Related image1
உங்கள் குழந்தைகள் Junk Food விரும்பிச் சாப்பிடுகிறார்களா? பெற்றோர் கண்டிப்பாய் அறிய வேண்டிய செய்தி!
Related image2
Indian Food Ban: அட நம்ம ஊரு சமோசா, நெய் எல்லாம் வெளிநாட்டுல தடையா?
34
ஈசியான செய்முறை இதுதான்
Image Credit : Freepik

ஈசியான செய்முறை இதுதான்

1. பொருட்களை பிளெண்ட் செய்யவும்: ஒரு குறுகலான பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் சேர்த்து, பிளெண்டர் அல்லது இம்மர்ஷன் மிக்சர் கொண்டு கலவை கெட்டியாகும் வரை பிளெண்ட் செய்யவும்.

2. க்ரீமியான பதம்: கலவை நன்கு கலந்து, க்ரீமியாக மாறும் வரை தொடர்ந்து பிளெண்ட் செய்யவும். தேவைப்பட்டால், இன்னும் கொஞ்சம் எண்ணெய் அல்லது பால் சேர்க்கலாம்.

3. சேமிப்பது எப்படி: சரியான பதம் வந்ததும், மயோனைஸை ஒரு சுத்தமான கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி, ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

44
சுவையை அதிகரிக்க இதனை செய்யுங்கள்
Image Credit : Freepik

சுவையை அதிகரிக்க இதனை செய்யுங்கள்

செய்து முடித்த மயோனைஸின் சுவையை மேலும் அதிகரிக்க, உங்களுக்குப் பிடித்த சில பொருட்களை சேர்க்கலாம். மொறுமொறுப்பான சுவை மற்றும் நல்ல டெக்ஸ்சருக்கு பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட் போன்ற காய்கறிகளை கலந்து கொள்ளலாம். மயோனைஸுக்கு நல்ல மணமும் தனித்துவமான சுவையும் கிடைக்க, நறுக்கிய பூண்டு, கொத்தமல்லி அல்லது புதினா போன்ற மூலிகைகளை சேர்க்கலாம். சற்று டாங்கியான சுவையை விரும்புபவர்கள் தக்காளி கெட்ச்அப், சில்லி சாஸ் அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம். மேலும், மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், ஓரிகானோ போன்ற மசாலாக்களையும் தேவைக்கேற்ப கலந்து கொள்ளலாம். இவ்வாறு மாற்றம் செய்து, சாண்ட்விச், பர்கர், ஃப்ரைஸ் மற்றும் ஸ்நாக்ஸ்களுடன் பரிமாறினால் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sitting for Long Hours: காலை முதல் மாலை வரை நாற்காலியில்தானா? நீண்ட நேரம் உட்காருவதால் வரும் ஆபத்துகள் இதோ
Recommended image2
Washing Machine : துணி துவைக்கும்போது இந்த 7 தவறுகளை செய்றீங்களா? மெஷினும் துணியும் பாதிக்கலாம்!
Recommended image3
Kitchen Tips: பழங்கள், காய்கறிகளை சுத்தமாக கழுவ இந்த 3 எளிய வழிகளை தெரிஞ்சுக்கோங்க
Related Stories
Recommended image1
உங்கள் குழந்தைகள் Junk Food விரும்பிச் சாப்பிடுகிறார்களா? பெற்றோர் கண்டிப்பாய் அறிய வேண்டிய செய்தி!
Recommended image2
Indian Food Ban: அட நம்ம ஊரு சமோசா, நெய் எல்லாம் வெளிநாட்டுல தடையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved