- Home
- Lifestyle
- Tips To Quit Smoking : வெறும் 21 நாட்கள் போதும்!! சிகரெட் பழக்கத்தை இப்படியும் நிறுத்தலாமா?
Tips To Quit Smoking : வெறும் 21 நாட்கள் போதும்!! சிகரெட் பழக்கத்தை இப்படியும் நிறுத்தலாமா?
புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் சில இயற்கை மற்றும் எளிய குறிப்புகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Tips To Quit Smoking
புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இது ஆஸ்துமா, புற்றுநோய் காசநோய் போன்ற தீவிர நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். மேலும் நுரையீரல் முதல் இதயம் வரை உடலின் ஒவ்வொரு உறுப்பும் சேதமடையும். ஆனாலும் பலர் இதை கைவிட முடியாமல் அதற்கு அடிமையாகி உள்ளனர். இருப்பினும் சிலரோ புகைபிடிப்பதை விட்டுவிட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் புகை பிடிக்கும் ஆசையை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்கள் விரும்பினாலும் கூட புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடிவதில்லை. நீங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த விரும்பினால் முதலில் உங்களது மனதை கட்டுப்படுத்துங்கள். பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பழக்கத்திலிருந்து சுலபமாக வெளியே வந்துவிடலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தண்ணீர்
உங்களுக்கு புகை பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம் உடனே ஒரு கிளஸ் தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் படிப்படியாக இந்த பழக்கத்தை குறைக்கும். தண்ணீர் குடிக்கும் பழக்கம் மிகச் சிறியது என்றாலும், அது மிகச்சிறந்த பலனைத் தரும்.
துளசி
சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடனே 2-3 துளசி இலைகளை மென்று சாப்பிடுங்கள். இது வாயை குளிர்விக்கும், நிக்கோட்டின் ஏக்கத்தை குறைக்கும் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். துளசி இலைகள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
ஏலக்காய், சோம்பு
ஏலக்காய், கிராம்பு, சோம்பு போன்ற மசாலா பொருட்களும் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும். எனவே இவற்றை எப்பொழுதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் இவற்றை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். சிகரெட் மீதான ஏக்கம் படிப்படியாக குறையும்.
இஞ்சி
இஞ்சியில் இருக்கும் காரமான சுவை நிக்கோட்டின் ஏக்கத்தை குறைக்கும். எனவே புகைப்பிடிக்கும் தோன்றும்போதெல்லாம் ஒரு சின்ன இஞ்சி துண்டை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். வேண்டுமானால் இஞ்சியுடன் தேன் கலந்து கூட சாப்பிடலாம்.
நெல்லிக்காய்
சிகரெட்டை கைவிட நெல்லிக்காய் பெரிதும் உதவும். இதற்கு நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை சமஅளவு எடுத்து தட்டி வைத்துக் கொள்ளுங்கள் பிறகு அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அவற்றை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு சேமிக்கவும். சிகரெட் பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அதை சாப்பிடுங்கள்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன் கலந்து ஒரு கிளாஸ் குடித்து வந்தால் உடலில் நிக்கோட்டின் படிப்படியாக வெளியேறும். புகை பிடிக்கும் பழக்கமும் கட்டுக்குள் வரும். மேலும் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.
எந்த பழக்கத்தையும் கடைபிடிக்க 21 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அதைப் போல மேலே சொன்ன டிப்ஸுகளை 21 நாட்கள் பின்பற்றினால் சிகரெட் பழக்கத்தை அடியோடு மறக்கலாம்.