MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இனி மழைகாலத்திலும் ஈசியா துணியை காய வைக்கலாம்; சுலபமான '4' எளிய வழிகள்!!

இனி மழைகாலத்திலும் ஈசியா துணியை காய வைக்கலாம்; சுலபமான '4' எளிய வழிகள்!!

Dry Clothes In Rainy Season : மழைக்காலத்தில் துணிகள் காய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எனவே இந்த சிக்கலை சரி செய்வதற்கான சில குறிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 20 2025, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Dry Clothes In Rainy Season In Tamil

Dry Clothes In Rainy Season In Tamil

தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மழை வந்தாலே கூடவே சில பல பிரச்சனைகளும் வருவது பொதுவானது. அதிலும் குறிப்பாக துவைத்த துணியை காய வைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஒருவேளை அப்படி காய்ந்தாலும் அதிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லாமல் குளிர்ச்சியாக இருப்பதால் துணிகள் உலர நீண்ட நேரம் எடுக்கும். இதே பிரச்சினையை நீங்களும் அனுபவிக்கிறீர்கள் என்றால், இந்த சிக்கலை தீர்ப்பதற்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Dry Clothes In Rainy Season In Tamil

Dry Clothes In Rainy Season In Tamil

துணிகளை நன்கு பிழியவும்:

நீங்கள் துவைத்த துணியை நன்றாக பிழிந்தால் அதிலிருந்து நீர் வெளியேறிவிடும். இப்போது அந்த துணியை நீங்கள் காய வைத்தால் சிறிது நேரத்தில் அது நன்கு காய்ந்து விடும். முக்கியமாக இந்த முறையானது ஜீன்ஸ், ஸ்வெட்டர் போன்ற கனமான துணிகளுக்கு மிகவும் ஏற்றது.

35
Dry Clothes In Rainy Season In Tamil

Dry Clothes In Rainy Season In Tamil

சுழல் சுழற்சி:

நீங்கள் வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் போது அதில் சுழல் சுழற்சி என்ற ஆப்ஷன் உள்ளது. அது உங்கள் துணிகளில் இருக்கும் கூடுதலான தண்ணீரை அகற்ற உதவுகிறது. வாஷிங் மிஷினில் இந்த முறையில் உங்கள் துணிகளை துவைத்து காய வைத்தால் சீக்கிரமாகவே உலர்ந்து விடும்.

இதையும் படிங்க:  இனி வாஷிங் மெஷின் வேண்டாம்; கம்பளி துணிகளை துவைக்க சூப்பர் டிப்ஸ்!!

45
Dry Clothes In Rainy Season In Tamil

Dry Clothes In Rainy Season In Tamil

ட்ரையர்:

துணிகளை துவைத்தும் சரியாக காயவில்லை என்றால் ஹேர் டிரையரை நீங்கள் பயன்படுத்தலாம். இது ஈரமான ஆடைகளில் இருக்கும் ஈரத்தை சுலபமாக அகற்றி விடும். இதற்கு ஹேர் டிரையரை துணியிலிருந்து சில அங்குலம் தூரத் வைத்து அதிலிருந்து வரும் சூடான காற்றை காட்டினால் துணி முழுமையாக காய்ந்து விடும். முக்கியமாக இந்த முறையானது சிறிய ஆடைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: இந்த '4' பொருள் போதும் துணியில் படிந்த சேற்றுக் கறையை சுலபமாக நீக்கிவிடலாம்!

55
Dry Clothes In Rainy Season In Tamil

Dry Clothes In Rainy Season In Tamil

மின்விசிறி:

மழைக்காலத்தில் துணியை துவைத்தால் அதை காய வைப்பதற்கு நீங்கள் துணியில் இருந்து ஆடையை நன்றாக பிழிந்து எடுக்கவும். பிறகு உங்கள் வீட்டின் இருக்கும் மின்விசிறி மூலம் ஆடைகளை காய வைக்கவும். இதனால் குறைந்த நேரத்திலேயே துணிகள் உலர்ந்து விடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
old saree reuse ideas: பழைய புடவைகளை இனி தூக்கிப் போடாதீங்க... இப்படி மாத்துங்க!
Recommended image2
Kundan Bangle: கம்பீரமான தோற்றத்திற்கு 5 முத்து ஜடாவ் வளையல் டிசைன்கள்
Recommended image3
Weight Loss Tips : எல்லாம் கரெக்டா செஞ்சும் உடல் எடை குறையவில்லையா? அப்ப இதான் காரணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved