MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Saree : டிரை கிளீனிங் ரகசியம்! வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பட்டுப் புடவை கறையை ஈஸியா போக்கலாம்!

Saree : டிரை கிளீனிங் ரகசியம்! வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பட்டுப் புடவை கறையை ஈஸியா போக்கலாம்!

How to Remove Oil Stains from Silk Saree : விலையுயர்ந்த பட்டுத் துணிகளில் எண்ணெய் கறை பட்டால், இனி நூற்றுக்கணக்கில் செலவு செய்து டிரை கிளீனிங் கொடுக்க வேண்டாம். வெறும் 10 ரூபாயில் உங்கள் ஆடைகளை புதுசு போல ஜொலிக்க வைக்கும் சூப்பர் டிப்ஸ் இதோ.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 28 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கறைகளை முழுமையாக நீக்க எளிய டிப்ஸ்
Image Credit : Chatgpt

கறைகளை முழுமையாக நீக்க எளிய டிப்ஸ்

பட்டுப் புடவை, டிசைனர் ஆடைகளில் எண்ணெய் கறை பட்டால் உடனே டிரை கிளீனிங் கொடுப்போம். இனி அந்த கவலை வேண்டாம். வெறும் 10-20 ரூபாயில் வீட்டிலேயே துணிகளைப் புதுப்பொலிவுடன் மாற்றும் ஒரு மேஜிக் டிரிக் இதோ.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
1. எண்ணெய் கறைக்கு முதல் உதவி டால்கம் பவுடர்!
Image Credit : our own

1. எண்ணெய் கறைக்கு முதல் உதவி டால்கம் பவுடர்!

துணியில் எண்ணெய் பட்டவுடன், அந்த இடத்தில் நாம் முகத்துக்குப் பயன்படுத்தும் டால்கம் பவுடரைத் தூவவும். பவுடர் எண்ணெயை உறிஞ்சிவிடும். சிறிது நேரம் கழித்து அதைத் தட்டிவிட்டால், 50% கறை மாயமாகிவிடும். துவைக்கும் முன் கறை எங்கே இருக்கிறது என்று குறித்துக் கொள்ளுங்கள்.
37
2. டிடர்ஜென்ட் வேண்டாம், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போதும்
Image Credit : Getty

2. டிடர்ஜென்ட் வேண்டாம், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போதும்

டிரை கிளீன் செய்ய வேண்டிய துணிகளுக்கு சோப் அல்லது வாஷிங் பவுடர் பயன்படுத்தாதீர்கள். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் நாம் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் சிறிது கண்டிஷனர் சேர்க்கவும். ஷாம்பூ கறைகளை நீக்கும், கண்டிஷனர் துணியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
47
3. துவைக்கும்போது இந்த விஷயங்களை கவனிங்க!
Image Credit : instagram

3. துவைக்கும்போது இந்த விஷயங்களை கவனிங்க!

வெளிர் மற்றும் அடர் நிறத் துணிகளை ஒன்றாகத் துவைக்க வேண்டாம். ஷாம்பூ கலந்த நீரில் துணிகளைப் போட்டு, கையால் மென்மையாகத் தேய்க்கவும். பிரஷ் பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை துணி சாயம் போவது போலத் தெரிந்தால், தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இது சாயம் போவதைத் தடுக்கும்.
57
4. கசக்க வேண்டாம், நிழலில் உலர்த்தவும்
Image Credit : Getty

4. கசக்க வேண்டாம், நிழலில் உலர்த்தவும்

துவைத்த பிறகு துணியை இறுக்கமாகப் பிழியக் கூடாது. அப்படிச் செய்தால் துணியில் சுருக்கங்கள் விழும். துணியை மெதுவாக தண்ணீரில் இருந்து எடுத்து, ஒரு ஹேங்கரில் மாட்டி நிழலில் உலர்த்தவும். எப்போதும் துணியை உல்டாவாக (உள்பக்கம் வெளியே தெரியும்படி) காய வையுங்கள்.
67
5. டிரை கிளீன் ஸ்டைல் அயர்னிங் முறை
Image Credit : amazon.in

5. டிரை கிளீன் ஸ்டைல் அயர்னிங் முறை

துணிகள் முழுமையாக காய்ந்த பிறகு, முதலில் துணியின் உள்பக்கத்திலும், பின்னர் வெளிப்பக்கத்திலும் அயர்ன் செய்யவும். இது துணியின் பளபளப்பை அதிகரிக்கும். மடிக்கும்போது நடுவில் ஒரு பேப்பர் வைத்தால், துணியின் மடிப்பு கலையாமல் அப்படியே இருக்கும்.
77
யாருக்கெல்லாம் இந்த முறை ஏற்றது?
Image Credit : instagram

யாருக்கெல்லாம் இந்த முறை ஏற்றது?

பட்டுப் புடவைகள், ஹெவி வொர்க் உள்ள சூட்கள் அல்லது விலை உயர்ந்த சில்க் ஷர்ட்களை இந்த முறையில் எளிதாக சுத்தம் செய்யலாம். இதனால் உங்கள் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாவதுடன், துணிகளின் ஆயுளும் கூடும்.

குறிப்பு: அதிகப்படியான வேலைப்பாடுகள் உள்ள அல்லது தண்ணீர் பட்டால் டேமேஜ் ஆகக் கூடிய துணிகளை மட்டும் பெட்ரோல் வாஷுக்கு கொடுக்க வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆடைகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Related Stories
Recommended image1
பட்டு சேலைல டீ கறையா? ஈஸியா நீக்க சூப்பர் டிப்ஸ்!!
Recommended image2
பட்டு துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்கலாமா? எப்படி துவைப்பது? தப்பி தவறி இதை மட்டும் செய்திடாதீங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved