பட்டு சேலைல டீ கறையா? ஈஸியா நீக்க சூப்பர் டிப்ஸ்!!
பட்டு சேலையில் இருக்கும் டீ கறையை சேலைக்கு எந்த பாதிப்பும் வராமல் எப்படி ஈஸியாக நீக்குவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

How to Remove Tea Stain from Silk Saree : பொதுவாக பெண்கள் பலருக்கும் பட்டு சேலை என்றாலே அலாதி பிரியம். திருவிழா, விசேஷ நாட்களில் அதை உடுத்துவது தனி அழகுதான். ஆனால் சில சமயம் தெரியாமல் பட்டு சேலையில் டீ அல்லது காபி கறை பட்டால் அவ்வளவு தான். இனி அந்த சேலையை போட முடியாது போலையே என்று தோன்றிவிடும். இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆம் பட்டு சேலையில் ஏற்பட்ட டீ கறையை மிக சுலபமாக, அதுவும் சேலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் போக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் கறைப்பட்ட இடத்தில் குளிர்ந்த தண்ணீரை மெதுவாக ஊற்ற வேண்டும். இதனால் கறை வேறு எங்கும் பரவாமல் தடுக்கப்படும். அடுத்ததாக துணி துவைக்கும் திரவம் அல்லது ஷாம்புவின் சில துளிகளை கறைகள் மீது தடவி, 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு குளிர்ந்த நீர் கலந்த சோப்பு தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு மெதுவாக அலச வேண்டும். சேலையை ஒருபோதும் தேய்க்க கூடாது. மென்மையாக கையாளுங்கள். இப்படி நீங்கள் செய்தால் பட்டு சேலையில் ஏற்பட்ட டீ கறை சுலபமாக நீங்கிவிடும்.
மற்றொரு வழி என்னவென்றால், வெள்ளை வினிகர் மற்றும் குளிர்ந்த தண்ணீரை சம அளவு ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சுத்தமான துணியை நினைத்து கறை மீது மெதுவாக ஒத்தி எடுக்க வேண்டும். கறை மறையும் வரை இப்படி நீங்கள் செய்ய வேண்டும். அதன்பிறகு குளிர்ந்த நீரில் சேலையை நனைத்து மெதுவாக அலச வேண்டும். இதனால் கறை சுலபமாக நீங்கிவிடும்.
3. சேலையில் பட்ட டீ கறை காய்ந்து போனால் சிறிதளவு பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட் போலாக்கி அதை கறை மீது தடவி பிறகு ஒரு மென்மையான பிரஷ் அல்லது துணி வைத்து மெதுவாக தட்டி கொடுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரில் சேலையை அலச வேண்டும்.
நினைவில் கொள்:
- பட்டு சேலையில் கறைப்பட்டால் அதை அப்படியே விட்டு விடாமல் உடனே சுத்தம் செய்தால் மட்டுமே கரை சீக்கிரமாக நீங்கும்.
- அதுபோல பட்டு சேலைக்கு ஒருபோதும் சூடான நீரை பயன்படுத்தவே கூடாது. ஏனெனில் அது பட்டு நூல் நிலைகளை பாதிக்கும் மற்றும் கறையை நிரந்தரமாக்கும்.
- பட்டு சேலையை கடினமாக தேய்க்க கூடாது. அப்படி தேய்த்தால் கறை இன்னும் பரவ வாய்ப்பு உள்ளன. எனவே மெதுவாக ஒத்தி தான் எடுக்க வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

