MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பட்டு துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்கலாமா? எப்படி துவைப்பது? தப்பி தவறி இதை மட்டும் செய்திடாதீங்க

பட்டு துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்கலாமா? எப்படி துவைப்பது? தப்பி தவறி இதை மட்டும் செய்திடாதீங்க

Silk Sarees in Washing Machine: பெண்களுக்கு விருப்பமான பட்டுப் புடவைகளை சரியான வழிமுறைகளான குளிர்ந்த நீர், நுட்பமான சுழற்சி, மற்றும் சலவை பை போன்றவற்றை பயன்படுத்தி துவைப்பதன் மூலம் புடவையின் தரத்தை பாதுகாக்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 08 2026, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பட்டுப் புடவைகள்
Image Credit : Asianet News

பட்டுப் புடவைகள்

புடவை என்றாலே பெண்களுக்கு பிரியம். அதுவும் பட்டுப்படவைகள் என்றால் சொல்லாவே வேண்டாம். எத்தனை புடவைகள் இருந்தாலும், பட்டுப்புடவைகளை எதுவும் ஈடாகாது. சில பெண்கள் தங்கள் அம்மா, பாட்டி பட்டுப் புடவைகளை கூட பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். இதனால் பெண்கள் தங்கள் பட்டுப் புடவையில் சுத்தம் செய்வதில் கவனமாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் தங்களின் பட்டுப் புடவைகளை உலர் சுத்தம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் பட்டு ஆடைகளை வாஷிங் மெஷினில் துவைக்கலாம். அதற்கு சரியான வழிமுறைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

25
பட்டு துணிகளை மெஷினில் துவைக்கலாமா?
Image Credit : stockPhoto

பட்டு துணிகளை மெஷினில் துவைக்கலாமா?

பட்டு துணிகளை மெஷிங் இயந்திரத்தில் துவைக்கலாம். ஆனால் அதற்கு முன், மெஷின் வாஷ் உண்மையில் பரிந்துரைக்கப்படுகிறதா என்பதை அறிய, பராமரிப்பு லேபிளை எப்போதும் படிக்கவும். ட்ரை க்ளீன் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தால், அதை வாஷிங் மெஷினில் கழுவக்கூடாது. உங்கள் பட்டு துணிகளை துவைக்க சிறப்பு கவனம் தேவை. சாதாரண பருத்தி ஆடைகளைப் போல் துவைக்க முடியாது.

Related Articles

Related image1
சமையலுக்கு இனி கவலை இல்லை! போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! எந்தெந்த காய்கள் என்ன விலை?
Related image2
தப்பி தவறி கூட இந்த 6 துணிகளை வாஷிங் மிஷினில் மட்டும் போட்டுடாதீங்க!
35
மெஷின் வாஷ்
Image Credit : Gemini

மெஷின் வாஷ்

உங்கள் பட்டு துணிகளை இயந்திரத்தில் துவைப்பது எப்படி?

உங்கள் பட்டு துணிகளை குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். துர்நாற்றம் மற்றும் கார தடயங்களை அகற்ற, நீங்கள் 1/4 கப் வினிகரை தண்ணீரில் கலக்கலாம்.

மெஷின் வாஷ்

உங்கள் பட்டு துணிகளை உள்ளே திருப்பி ஒரு சலவை பையில் வைக்க வேண்டும். இந்த பை கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. அல்லது தலையணை உறையையும் பயன்படுத்தலாம். இயந்திர அமைப்பு மிக முக்கியமான பகுதியாகும். உங்கள் வாஷிங் மெஷினில் நுட்பமான சுழற்சியைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்ய வேண்டும். சுழல் குறைவாக இருக்க வேண்டும். மேலும் நீர் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடாது. சுழற்சி முடிந்த உடனேயே ஆடைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் ஆடையில் சுருக்கம் ஏற்படலாம்.

45
நேரடியாக சூரிய ஒளியில் காய வைக்க வேண்டாம்
Image Credit : Asianet News

நேரடியாக சூரிய ஒளியில் காய வைக்க வேண்டாம்

துணிகளை அவற்றின் இயற்கையான வடிவத்தில் உலர வைக்கவும். பட்டுப்புடவைகளை ட்ரையரில் வைக்கவோ கூடாது. அதிகப்படியான தண்ணீரை அகற்ற, உங்கள் துணிகளை உலர்ந்த துண்டில் வைத்து மெதுவாக துடைக்கலாம். மேலும் உங்கள் பட்டு துணியை நேரடியாக சூரிய ஒளியில் காய வைக்க வேண்டாம். இது நிறத்தை வெளிற செய்யலாம். பின்னர் சுருக்கங்களை நீக்க ஸ்ட்மீரில் உலர்த்தலாம்.

55
அலமாரியில் தொங்க விடுங்கள்
Image Credit : Asianet News

அலமாரியில் தொங்க விடுங்கள்

பருத்தி துணிகளை துவைப்பதை விட பட்டு துணிகளை துவைக்கும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வாஷிங் மெஷினில் போடுவதில் சந்தேகம் இருந்தால் அவற்றை ட்ரை க்ளீன் செய்ய அனுப்பவும். உங்கள் பட்டுப்புடவைகளை ஒரு சலவை பையில் போது, நுட்பமான சுழற்சியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் துணிகளைத் துவைக்க குளிர்ந்த நீரைத் தேர்ந்தெடுக்கவும். துவைத்த பின், உங்கள் பட்டு ஆடைகளை உங்கள் அலமாரியில் தொங்க விடுங்கள். இதன் மூலம் பட்டுப்படவையை பத்திரமாக பாதுகாக்க முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Money Attracting Statues: வீட்டில் இந்த சிலை இருந்தா காந்தம் போல பணம் ஈர்க்கும்
Recommended image2
கறிவேப்பிலையை ஃப்ரெஷ்ஷா வெச்சுக்க இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
Watermelon Peel: தர்பூசணி தோலை தூக்கி எறியாதீங்க! பொரியல், சாலட் செய்ய சூப்பர் டிப்ஸ்
Related Stories
Recommended image1
சமையலுக்கு இனி கவலை இல்லை! போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! எந்தெந்த காய்கள் என்ன விலை?
Recommended image2
தப்பி தவறி கூட இந்த 6 துணிகளை வாஷிங் மிஷினில் மட்டும் போட்டுடாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved