- Home
- Lifestyle
- வீட்ல எலித் தொல்லை பாடாய்படுத்துதா !அப்போ இந்த ஈஸி டிப்ஸ பாலோ பண்ணி பாருங்க! 1 கூட தப்பிக்காது!
வீட்ல எலித் தொல்லை பாடாய்படுத்துதா !அப்போ இந்த ஈஸி டிப்ஸ பாலோ பண்ணி பாருங்க! 1 கூட தப்பிக்காது!
எலியை வீட்டில் இருந்து விரட்டி அடிக்க பயன்படும் வீட்டு பொருட்கள் என்னென்ன என்பதை என்று இந்த பதிவில் காணலாம்

கிராமமோ அல்லது நகரமோ எங்கிருந்தாலும் பலரது வீடுகளிலும் இருக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று எலித்தொல்லை ஆகும். எலிகள் நாம் உடுத்தும் ஆடைகள், உணவுப்பொருட்கள், புத்தகங்கள் என்று அனைத்தையும வீணாக்குகின்றன.
மேலும் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளையும் உண்டாக்குகின்றன. வீடுகளில் எலிகள் இருக்கும் பட்சத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. என்னதான் எலிப்பொறி, எலிமருந்து கடைகளில் இருந்து வாங்கி வீட்டில் வைத்தாலும் எலித்தொல்லையை முழுதாக விரட்டுவது என்பது சற்று கடினமான ஒன்று என்று கூறலாம்.
எப்போதும் கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி உபயோகிப்பதை விட வீட்டிலிருக்கும் சில பொருட்களை வைத்தே நம் வீட்டினுள் வசிக்கும் எலிகளை விரைவில் எலித்தொல்லையில் இருந்து நிவாரணம் பெறமுடியும்.மேலும் கடைகளில் இருந்து வாங்கப்படும் மருத்துங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியவையும் கூட!
எலியை வீட்டில் இருந்து விரட்டி அடிக்க பயன்படும் வீட்டு பொருட்கள் என்னென்ன என்பதை என்று இந்த பதிவில் காணலாம் .
பெப்பர்மிண்ட் ஆயில் :
எலிகளுக்கு புதினா வாசனை அறவே பிடிக்காது. ஆகையால் ஒரு சிறிய அளவிலான துணியில் சிறிதளவு பெப்பர்மிண்ட் ஆயிலை தெளித்து, அதனை வீட்டின் நுழைவு வாயில், மூலைகள், ஹோல்கள் என்று எலிகள் வரக்கூடிய இடைவெளிகளில் வைக்கலாம். பொதுவாக எலிகள் பெரும்பாலும் மூலைகளில் தான் வசிக்கும்.
இப்படி 2 நாட்களுக்கு 1 முறை இந்த துணியை மாற்றி மாற்றி வைக்க வேண்டும். இந்த பெப்பர் மிண்ட் ஆயிலின் நறுமணத்தால் வீடும் பிரெஷ்ஷாக இருக்கும். எலியும் அடியோடு ஒழியும் .
வெங்காயம்
வெங்காயத்தின் கடுமையான வாசனை மனிதருக்கு மட்டுமல்ல, எலிகளுக்கும் எரிச்சலை உண்டாக்கும் .ஆனால் இதனை பின்பற்றுவதில் கொஞ்சம் கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் வெங்காயம் விரைவில் அழுகும் தன்மை கொண்டதால் 2 நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருத்தல் வேண்டும். அழுகிய நிலையில் இருக்கும் வெங்காயம் துர்நாற்றமாக மாறி செல்லப் பிராணிகளுக்கு தீங்கினை உண்டாக்கும்.
பூண்டு
தோல் உரித்து நறுக்கிய பூண்டை தண்ணீரில் கலப்பதால் நாமே சொந்தமாக எலி மருந்தை உற்பத்தி செய்யலாம். இந்த கவையை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்பிரே போன்று தெளிக்கலாம். இடுக்குகள்,மூலைகள், துவாரங்கள் என்று அனைத்து இடங்களிலும் தெளிக்கலாம்.
கிராம்பு
எலிகளுக்கு கிராம்பின் வாசனையும் சேராது. ஒரு துணியில் சிறிதளவு கிராம்புகளை வைத்து சின்ன மூட்டை போன்று கட்டி எலி வரும் இடங்கலில் கட்டி வைக்கலாம் . அல்லது கிராம்பு எண்ணெய்களை பாட்டிலில் ஊற்றி ஸ்பிரே போன்று தெளிக்கலாம்.
உருளைக்கிழங்கு:
எலிகள் அடிக்கடி வந்து செல்லும் இடங்களில் உருளைக்கிழங்கு பொடியைத் தெளிக்கலாம். எலிகள் இதனை சாப்பிடும் போது உருளைக்கிழங்கின் செதில்கள் எலிகளின் குடலில் வீக்கத்தை ஏற்படுத்தி இறுதியாக அதனை கொன்றுவிடும்.
1300 வருடங்கள் பழமையான காலகாலேஸ்வரர் திருத்தலம்- மணல் லிங்கமாக காட்சியளிக்கும் ஈசன்!