- Home
- Lifestyle
- Weight Loss Tips: காலையில் வெறும் வயிற்றில் இந்த ஒரு ஜூஸ் குடித்தால் போதும்..உடல் எடை மடமடவென குறையும்..
Weight Loss Tips: காலையில் வெறும் வயிற்றில் இந்த ஒரு ஜூஸ் குடித்தால் போதும்..உடல் எடை மடமடவென குறையும்..
Perunjeeragam juice health benefits in tamil: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த ஒரு பெருஞ்சீரக ஜூஸ் மட்டும் குடித்து பாருங்கள். உங்களின் எடை மடமடவென குறையும்.

நம்மில் பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பதால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். எனவே, உங்கள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த ஒரு பெருஞ்சீரக ஜூஸ் மட்டும் குடித்து பாருங்கள். உங்களின் மடமடவென குறையும். பெருஞ்சீரகம் என்பது குஜராத்தின் பிரபலமான பானமாகும், இது குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். எடையைக் குறைக்க பெருஞ்சீரகம் பயனுள்ளதாக இருக்கும்.
பெருஞ்சீரகம் ஜூஸ் எப்படி செய்வது?
இதற்கு முதலில் பெருஞ்சீரகத்தை ஒரே இரவில் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் காலையில் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு பெருஞ்சீரகத்தை நன்றாக அழுத்தி வடிகட்டி, அதன் ஜூஸை எடுத்துக்கொள்ளவும். சுவையை அதிகரிக்க சிறிது உப்பை இதில் சேர்க்கலாம். இவை நம் உடலுக்கு நன்மை பயக்கும். மேலும் உடல் எடையை குறைக்க உதவும்.
பெருஞ்சீரகம் ஜூஸ் பயன்கள்:
தினமும் பெருஞ்சீரகம் ஜூஸ், குடித்து வந்தால் சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் உடனடியாக தீரும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு மார்பகங்களில் பால் சுரப்பு சமயங்களில் குறைந்து விடும். தாய் பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகம் ஜூஸ் குடிப்பது நல்லது.
பெருஞ்சீரகம் ஜூஸ் குடிப்பதால், செரிமான அமைப்பு வலுவடையும் மற்றும் மலச்சிக்கல், வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளையும் இது நீக்க உதவும்.
பருக்கள், முகப்பரு போன்ற பல சரும பிரச்சனைகள் நீங்கி முகம் பொலிவு பெறுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் தவிர, இது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மோனோபாஸ் பிரச்சனைகளில் பெருஞ்சீரக சிரப் நன்மை பயக்கும்.
எடை இழக்க பெருஞ்சீரகம் ஜூஸ் எப்படி உதவும்
பெருஞ்சீரகத்தில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. பெருஞ்சீரக ஜூஸ்ஸின் ஆற்றல் உடலில் நீண்ட நேரம் இருக்கும், இதன் காரணமாக பசியின்மை இருக்காது மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எனவே கொழுப்பைக் குறைக்க, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருஞ்சீரகம் ஜூஸ் அருந்தலாம்.