MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • விறகு வெட்டுதல் ஆண்மையை அதிகரிக்குமா? ஒரு சில நிமிடங்களில் பலன்.. உண்மையா? 

விறகு வெட்டுதல் ஆண்மையை அதிகரிக்குமா? ஒரு சில நிமிடங்களில் பலன்.. உண்மையா? 

Wood Chopping And Testosterone : விறகு வெட்டுவது ஆண்மையை அதிகரிக்கும் என சொல்வது உண்மையா? என்பது குறித்த தெளிவான விளக்கத்தை இங்கு பார்க்கலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 21 2025, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Wood Chopping And Testosterone In Tamil

Wood Chopping And Testosterone In Tamil

ஆண்களுடைய ஹார்மோன் சரியாக வேலை செய்யும்போது தான் அவர்களுடைய ஆண்மையின் பலமும் வீரியமாக இருக்கும். அவர்களுடைய உடலில் ஆண்மையை அதிகரிக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பருவமடையும் காலத்தில் தான் அதிகரிக்கும். இந்த ஹார்மோன் தான்  பெண்களிடமிருந்து ஆண்களை வேறுபடுத்தி காட்டும் பண்புகள் ஆண்களுக்கு வழங்குகிறது. இதுவே ஆண்களின் பாலியல் உணர்வுகளை தூண்டி விழிப்புணர்வை வழங்கும். டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு ஆண்களுக்கு முக்கியமானது. ஆண்மைக்கும் அதற்கும் பலமான தொடர்புண்டு. அவசரகதியாகி போன வாழ்க்கையில் இந்த காலத்து ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாகவே உள்ளது. இப்படி அந்த ஹார்மோன் குறைவாக சுரக்கும் ஆண்களுக்கு பாலுணர்வு குறைவாக காணப்படும். இப்படி டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பிரச்சனையால் ஆண்மை பலம் குறைவாக காணப்படும் ஆண்கள் அதிகமாகி வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Wood Chopping And Testosterone In Tamil

Wood Chopping And Testosterone In Tamil

டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பு: 

அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் மரங்களை வெட்டுவது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் உடனடி தீர்வாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை  கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்தனர். அவர்களின் ஆய்வின் முடிவில் 48% வரைக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்க மரங்களை வெட்டுவது உதவியதாக தெரிகிறது. விறகு வெட்டுதல், மரக்கட்டைகளை சிறிய துண்டாக வெட்டுதல் போன்றவவை டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு ஆண்களின் டெஸ்டோஸ்டிரோனின் சுரப்பு குறித்த புதிய பார்வையை ஆராய்ச்சியாளர்களுக்கு தந்தது.

35
Wood Chopping And Testosterone In Tamil

Wood Chopping And Testosterone In Tamil

புதிய திருப்புமுனை: 

இந்த ஆய்விற்காக அமேசான் காடுகளில் மரங்களை வெட்டும் ஆட்களிடம் இருந்து உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் மரங்களை வெட்டிய ஆண்களுடைய டெஸ்டோஸ்டிரோனின் அளவு ஆச்சரியத்தை தந்ததாக ஆய்வு மேற்கொண்ட கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பென் ட்ரம்பிள் தெரிவித்துள்ளார்.  இந்த ஆய்வின் முடிவுகள் மறுமலர்ச்சி மற்றும் மனித நடத்தை (Evaluation and Human Development) என்ற இதழில் வெளியானது. 

இதையும் படிங்க: ஆண்களே, இயற்கையாகவே 'அந்த ஹார்மோன்’ அளவை அதிகரிக்கலாம்.. இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

45
Wood Chopping And Testosterone In Tamil

Wood Chopping And Testosterone In Tamil

எப்படி ஆண்மை அதிகரிக்கும்? 

ஒரு மணி நேரம் எந்த ஆண் விறகு அல்லது மரம் வெட்டினாலும் அவர்களுடைய உமிழ்நீரில் டெஸ்டோஸ்டிரோன் அளவு 48 சதவீதம் உயர்வதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. ஆனால் சுறுசுறுப்பாக கால்பந்து விளையாடினால் கூட 30.1 சதவீதம் தான் அதிகரிக்கிறதாம்.

இதையும் படிங்க:  ஆண்களுக்கு 'அந்த' பிரச்சனை இருப்பதைக் குறிக்கும் அறிகுறிகள் இவையே!

55
Wood Chopping And Testosterone In Tamil

Wood Chopping And Testosterone In Tamil

டெஸ்டோஸ்டிரோனின் என்ன செய்யும்? 

 டெஸ்டோஸ்டிரோன் அதிகளவு சுரப்பதால் தசைகளின் செயல்திறனை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஹார்மோன் ஆண்களின் பாலுணர்வை தூண்டக் கூடியது. ஒரு ஆணின் பாலியல் விருப்பம், விந்தணு உற்பத்தி ஆகியவை டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் தொடர்புடையது. இது சரியாக இல்லாவிட்டால் ஆண்மை குறைபாடு வரலாம். அதாவது பாலியல் விருப்பம் குறைந்துவிடும் வாய்ப்புள்ளது. உடலுறவின் போது விறைப்புத்தன்மை கோளாறு வரவும், இந்த ஹார்மோன் சுரப்பு குறைவது காரணமாகிவிடும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைவதால் மனநிலையும் பாதிக்கும். மனச்சோர்வு ஏற்படலாம். ஆகவே டெஸ்டோஸ்டிரோனின் சுரப்பை அதிகரிக்கும் உணவு பழக்கத்தை பின்பற்றுவது அவசியம். இந்த ஹார்மோன்  பாலியல் தேவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப் பேணவும்  உதவும். உடனடியாக டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்க விறகு வெட்டலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Health: முடி உதிர்வு, தலையில் அரிப்பு.! முடி உதிர்வைத் தடுக்க இந்த 8 வழிகள் தெரியுமா?
Recommended image2
Crispy, Healthy Samosa Recipe: 4 சமோசாவில் 35 கிராம் புரதச்சத்து.. புரதச்சத்து நிறைந்த மொறுமொறுப்பான சமோசா.. வீட்டிலேயே செய்வது எப்படி?
Recommended image3
Gold Ring Designs : 2 கிராம் தங்கத்தில் இத்தனை புதுமையான மோதிரங்களா? தினமும் அணிய 7 சூப்பர் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved