நெய்யை எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம் தெரியுமா?
Ghee Expiration Date : நெய் உண்மையில் காலாவதியாகுமா இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா? இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
Does ghee expire?
நெய் பல நூற்றாண்டுகளாக இந்திய சமையலில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. உதாரணமாக செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, இளமையாக வைக்கும் மற்றும் உடலுக்கு ஊட்டமளிக்கிறது. சொல்லபோனால், நெய் அதன் மருத்துவ குணங்களால் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
Does ghee expire?
இதுதவிர, நெய் அதன் செழுமையான சுவை மற்றும் நறுமணத்திற்காக மிகவும் அறியப்படுகிறது. இது பொதுவாக இந்திய உணவுகளில் காய்கறிகள், ரொட்டி,பருப்புகள் மற்றும் பிரியாணிகள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, பண்டங்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. நெய் ஒரு முதன்மையாக நிறைவுற்ற கொழுப்புகளால் ஆனது.
இத்தகைய சூழ்நிலையில், நெய் உண்மையில் காலாவதியாகுமா இல்லையா? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா? இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: யாரெல்லாம் நெய் சாப்பிடவே கூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?
Does ghee expire?
நெய் காலாவதியாகுமா?
நீ காலாவதியாகுமா அல்லது கெட்டுப் போகுமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா? இதற்கான பதில் ஆம். மற்ற பொருட்களை போலவே நெய்யும் கெட்டுப்போக வாய்ப்பு அதிகம் உள்ளது. நீங்கள் கடைகளில் நெய் வாங்கும் போது நெய்யில் காலாவதி தேதி எழுதப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எதுவரை அதை பயன்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிட்டிருந்ததோ, அது தான் அதற்கான ஆயுட்காலம் ஆகும்.
இதையும் படிங்க: நெய் காபி vs நெய் டீ - எதை காலையில் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம்!!
Does ghee expire?
நெய் கெட்டுப் போயிருக்கும் என்பதை குறிக்கும் சில அறிகுறிகள்:
நாற்றம் - நெய்யில் துர்நாற்றம் அல்லது புளிப்பான வாசனை வந்தால் அது கெட்டுப் போனதற்கான அர்த்தமாகும்.
நிறமாற்றம் - நெய்யில் ஏதேனும் அசாதாரண நிறமாற்றம் இருப்பதை நீங்கள் கண்டால் அது கெட்டுப் போனது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
விசித்திரமான அமைப்பு - பொதுவாக நெய் மென்மையான மற்றும் கிரீமி அமைப்பை கொண்டிருக்கும். ஆனால் நெய்யில் ஏதேனும் இருக்கும் அல்லது பிரிவினையை நீங்கள் கவனித்தால் அது கெட்டு போய்விட்டது என்பதன் அறிகுறி.
Does ghee expire?
நெய்யை நீண்ட நாள் பயன்படுத்த சில டிப்ஸ்:
1. காற்று மற்றும் ஈரப்பதம் வெளிப்படுவதை தடுக்க நெய்யை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் சேமிக்க வேண்டும்.
2. நெய்யை நேரடி சூரிய ஒளி அல்லது வெப்பம் மூலங்களில் இருந்து விலக்கி வைக்கவும். அதற்கு பதிலாக, குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் வைக்கலாம்.
3. நெய் கெட்டுப் போகாமல் இருக்க நீங்கள் நெய்யை டப்பாவில் இருந்து எடுக்கும்போது சுத்தமான கரண்டியை பயன்படுத்த மறக்காதீர்கள்.
மேலே சொன்ன முறை படி நெய்யை சரியாக சேமித்து வந்தால், நெய் 3 வருடங்கள் வரை கெட்டுப் போகாது.