பொது இடங்களில் பாத்ரூம் கதவுகளுக்கு கீழே ஏன் இடைவெளி உள்ளது தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!
அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள பெரும்பாலான கழிப்பறை கதவுகளின் அடிப்பகுதி வெளியில் இருப்பவர்களின் கால்களைப் பார்க்க அனுமதிக்கும் இடைவெளியைக் கொண்டுள்ளது. அது ஏன் என்று என்றாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?
டாய்லெட் கதவுகள் முழுமையாக மூடியில்லாமல் அடியில் பெரிய இடைவெளிவிட்டு சிறிய கதவுகளாக இருக்கும். அதேபோல் மேலேயும் இடைவெளி இருக்கும். ஆனால் வீட்டிலோ அல்லது ஹோட்டல் அறையிலோ அப்படி கதவுகளை வைப்பதில்லை.
பொதுக் கழிப்பறையின் அடிப்பகுதியில் இடைவெளி வைப்பது அடிக்கடி அசுத்தமாகும் தரையை சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். கழிப்பறைக்குள் நுழையாமல் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிடலாம்.
அதேபோல கழிவறைக்குள் இருப்பவருக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டாலோ அல்லது சில காரணங்களால் கீழே விழுந்துவிட்டாலோ கீழ் பகுதியிலிருந்து எளிதில் தெரிந்துகொள்ளலாம்.
கதவு முழுவதுமாக மூடப்பட்டால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. கழிப்பறையில் உள்ள துர்நாற்றமும் அடிப்பகுதி மூடப்படாததால் விரைவாக வெளியேறும்.
கீழே கால் தெரிவதை வைத்து உள்ளே ஆள் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளலாம். இதனால் பின்னே வருவோர் காத்திருந்து பின் செல்ல உதவியாக இருக்கும்.
மேலும், இரவும் பகலும் தொடர்ந்து பயன்படுத்துவதால் அடிக்கடி திறந்து மூடுவதால் கதவின் கீழ் பகுதி சேதமடையும் அபாயம் இருப்பதில்லை.
அதேபோல் உள்ளே சென்ற நபருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சிக்கலில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு எளிதில் உதவ மேலிருந்தோ அல்லது கீழிருந்தோ தேவையை கேட்டு உதவலாம்.
Vijay : கேரளாவில் படுதோல்வியை சந்தித்த வாரிசு.. அப்போ லியோ கதி.? தளபதி விஜய் படத்துக்கு வந்த சிக்கல்