Electric Scooters : ரூ.49 ஆயிரத்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. 3 வருட வாரண்டி - முழு விபரம் இதோ !!
ரூ.49,000க்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 வருட வாரண்டி உடன் வருகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.
பட்ஜெட் விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. மிக மலிவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (ஸ்கூட்டர்) ஒன்று கிடைக்கிறது. சந்தையில் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. இவற்றில் சில மலிவு விலையில் கிடைக்கின்றன. இவற்றில் யோ எட்ஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் (EV) ஒன்று.
இந்த ஸ்கூட்டரின் விலை குறைவு. அம்சங்களும் நன்றாக உள்ளன. குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்கள் இந்த மாடலைப் பார்க்கலாம். யோ பைக்ஸ் (Yo Bikes) நிறுவனம் Yo Edge DX என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இது மூன்று ஆண்டுகள் வரை உத்தரவாதத்துடன் வருகிறது.
முன்பக்க டிஸ்க் பிரேக்குகள், 145 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், சிறந்த மற்றும் பெரிய இருக்கை, டிஜிட்டல் டிஸ்ப்ளே, 3 இன் 1 லாக்கிங் சிஸ்டம், கீலெஸ் ஸ்டார்ட் ஆப்ஷன், மல்டிபிள் ரைடிங், ரிவர்ஸ் மோட், இன்பில்ட் மொபைல் என சார்ஜிங் சாக்கெட் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி விளக்குகள், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர். சார்ஜிங் நேரம் 3 முதல் 4 மணி நேரம் ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 75 கிலோ வரை எடையை இழுக்கும். எனவே அதிக எடை கொண்டவர்கள் இந்த ஸ்கூட்டரை விட்டு விலகி இருப்பது நல்லது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும், சந்தைக்குச் செல்வதற்கும், காய்கறிகள் வாங்குவதற்கும் இந்த ஸ்கூட்டர் ஏற்றது என்றே கூறலாம்.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையும் குறைவு. இதன் விலை ரூ. 49,000 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. எனவே பட்ஜெட் விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரும்புவோர் இதைப் பார்க்கலாம். இந்த மின்சார ஸ்கூட்டர் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. அதேபோல மற்ற வாகனங்களை பொறுத்தவரை ஓலா முதல் ஏத்தர், டிவிஎஸ், பஜாஜ் என பல நிறுவனங்கள் பல்வேறு விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வழங்குகின்றன. நீங்கள் விரும்பும் பட்ஜெட் ஸ்கூட்டரை வீட்டிற்கு வாங்கலாம்.
'நா ரெடி தான் வரவா'.. 5 புது பைக்குகளுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டு!