MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வயசே ஆகாது!! இளமையான சருமத்திற்கு உதவும் 'ஆயுர்வேத' மூலிகைகள் தெரியுமா?

வயசே ஆகாது!! இளமையான சருமத்திற்கு உதவும் 'ஆயுர்வேத' மூலிகைகள் தெரியுமா?

Herbs For Younger Looking Skin : நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க விரும்பினால், ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சில மூலிகைகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் அதை முன்கூட்டிய முதுமையை தடுக்கும். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 09 2024, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Herbs For Younger Looking Skin In Tamil

Herbs For Younger Looking Skin In Tamil

இளமையாக இருக்க யாரு தான் விரும்ப மாட்டார்கள். பொதுவாக வயது அதிகரிக்கும் போது சருமத்தில் சுருக்கங்கள் வருவது இயல்புதான். ஆனால் சிலருக்கு நடுத்தர வயதிலேயே வயதான தோற்றம் தெரிய ஆரம்பிக்கும் இதற்கு வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் கொஞ்சம் பல காரணங்கள் உள்ளன. 

26
Herbs For Younger Looking Skin In Tamil

Herbs For Younger Looking Skin In Tamil

இவற்றை உங்களால் தடுக்க முடியாது.  ஆனால் உங்களது சருமம் வேகமாக வயதாவதை நிறுத்த முடியும். இதற்கு ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள சில மூலிகைகள் உள்ளன அவற்றை உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதும். உங்களது சரும பிரச்சனைகள் நீங்குவது மட்டுமின்றி, வயதான அறிகுறிகளும் குறையும். எனவே இந்த பதிவில் வயதான அறிகுறிகளை நீக்கும் சருமத்திற்கு  மிகவும் பயனுள்ள 4 மூலிகைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  இளமையான. பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பேஸ் பேக் மட்டும் போதும்!

36
Herbs For Younger Looking Skin In Tamil

Herbs For Younger Looking Skin In Tamil

என்றும் இளமையாக இருக்க உதவும் மூலிகைகள்:

மஞ்சள்

மஞ்சள் கடவுள் நமக்கு அளித்த பரிசு. மஞ்சள் சிறந்த மூலிகையாகும். ஆயுர்வேதத்தின்படி. மஞ்சள் பல பிரச்சினைகளுக்கு அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் சளி, இருமலுக்கு மட்டுமின்றி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும், புற ஊதா கதிர்களில் இருந்து சேதம் ஏதும் ஏற்படாமல் உங்களை பாதுகாக்கவும் உதவுகிறது. மஞ்சளை உங்கள் உடலில் தேய்த்து குளித்தால் உங்களது சருமம் பிரகாசிக்கும் மற்றும் வயதான தோற்றம் தடுக்கப்படும்.

46
Herbs For Younger Looking Skin In Tamil

Herbs For Younger Looking Skin In Tamil

நெல்லிக்காய்

ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் ஒரு அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சரும மற்றும் கண்களின் பராமரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஃபிரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது. முக்கியமாக வயதான அறிகுறிகளை குறைக்க நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. எனவே சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க தினமும் காலை ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

56
Herbs For Younger Looking Skin In Tamil

Herbs For Younger Looking Skin In Tamil

துளசி

துளசி உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் உங்களது அழகை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இதில் இருக்கும் பண்புகள் சருமத்திற்கு எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. எனவே இதை நீங்கள் உங்களது உணவில் சேர்ப்பதன் மூலம் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும் மற்றும் உங்களது சருமத்தை மென்மையாகவும், நீரேற்றமாகவும் வைக்கும். எனவே இதை நீங்கள் தேநீரில் போட்டு குடிக்கலாம் அல்லது துளசி இலையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

66

ரோஸ்மேரி

சூரியனின் புற உதாக்கதிர்வீச்சால் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் சீக்கிரமே வந்துவிடும். இதை தடுக்க ரோஸ்மேரி உதவும். ரோஸ்மேரி சருமத்தை இளமையாக வைத்திருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு டயட்டில் ரோஸ்மேரியை நீங்கள் தேநீரில் போட்டு குடிக்கலாம்.

இதையும் படிங்க:  இந்த ஜூஸை தொடர்ந்து குடித்தால் போதும்! உங்க முகம் தங்கம் போல் ஜொலிக்கும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved