MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • புது டிரெஸ் துவைக்காம அப்படியே போடுறீங்களா? இந்த 5 ஆபத்துகளை தெரிஞ்சிக்கோங்க!

புது டிரெஸ் துவைக்காம அப்படியே போடுறீங்களா? இந்த 5 ஆபத்துகளை தெரிஞ்சிக்கோங்க!

New Clothes: கடையில் புது துணி வாங்கியதும், அப்படியே டேக்கை பிரித்து உடுத்துகிறீர்களா? இந்த தவற்றால் கடுமையான தோல் நோய், அலர்ஜி மற்றும் தொற்றுகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 25 2026, 11:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
புது துணியை துவைக்காம அப்படியே போடுறீங்களா?
Image Credit : AI

புது துணியை துவைக்காம அப்படியே போடுறீங்களா?

பண்டிகைக்காக வாங்கிய புது துணியோ அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்த புது சட்டையோ, கைக்கு வந்ததும் அப்படியே போட்டுப் பார்க்கும் சந்தோஷமே தனி தான். ஆனால், இந்த சந்தோஷம் உங்களுக்கு அரிப்பு, தடிப்பு, அலர்ஜி மற்றும் கடுமையான தொற்றுகளை கொண்டு வரலாம். புது துணியை ஒருமுறை துவைத்துவிட்டு தான் உடுத்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏன் தெரியுமா? இதோ விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
1. ஆபத்தான ஃபார்மால்டிஹைடு கெமிக்கல்
Image Credit : AI

1. ஆபத்தான ஃபார்மால்டிஹைடு கெமிக்கல்

துணிகள் சுருங்காமல் இருக்கவும், சாயம் போகாமல் பளபளப்பாக தெரியவும் தொழிற்சாலைகளில் ஃபார்மால்டிஹைடு ரெசின், அசோ டை போன்ற கெமிக்கல்களை பயன்படுத்துகிறார்கள். இந்த கெமிக்கல் நேரடியாக சருமத்தில் படும்போது, சருமம் சிவந்து போதல், கடுமையான அரிப்பு, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். அமெரிக்கன் காண்டாக்ட் டெர்மடிடிஸ் சொசைட்டி இதை ஒரு முக்கிய அலர்ஜி காரணியாக அறிவித்துள்ளது.

2. சாயத்தால் வரும் அலர்ஜி

டார்க் கலர் ஜீன்ஸ், கருப்பு அல்லது சிவப்பு நிற துணிகளில் அதிக சாயம் இருக்கும். இந்த சாயம் வியர்வையுடன் கலந்து சருமத்திற்குள் ஊடுருவும். இதனால் காண்டாக்ட் டெர்மடிடிஸ் என்ற தோல் நோய் வருகிறது. நீண்ட நாட்களாக இப்படிப்பட்ட ரசாயனங்கள் சருமத்தில் படுவது உடல்நலத்திற்கு மிகவும் ஆபத்தானது.

3. கடைகளில் இருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகள்

கொஞ்சம் யோசித்து பாருங்கள், உங்களுக்கு முன் எத்தனை பேர் அந்த துணியை ட்ரையல் ரூமில் போட்டுப் பார்த்திருப்பார்கள்? அவர்களின் வியர்வை, தூசு, பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் அந்த துணியிலேயே ஒட்டியிருக்கும். குடோனில் இருந்து கடைக்கு வரும் வரை தூசு, எலி, கரப்பான் பூச்சிகளின் நடமாட்டமும் அதில் இருந்திருக்கலாம். துவைக்காமல் உடுத்தினால், அந்த கிருமிகள் நேரடியாக உங்கள் உடலுக்குள் வந்துவிடும்.

33
4. பேன் மற்றும் பூஞ்சை தொற்று
Image Credit : AI

4. பேன் மற்றும் பூஞ்சை தொற்று

குறிப்பாக தொப்பி, உள்ளாடைகள் அல்லது ஸ்வெட்டர் போன்றவற்றை மற்றவர்கள் போட்டுப் பார்த்திருந்தால், அதன் மூலம் ஸ்கேபிஸ், ஃபங்கல் இன்ஃபெக்ஷன் மற்றும் பேன் தொல்லை கூட உங்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.

5. அதிக வியர்வை மற்றும் துர்நாற்றம்

புது துணியில் கஞ்சி மற்றும் கெமிக்கல் பூச்சு இருப்பதால், அது வியர்வையை உறிஞ்சாது. இதனால் உங்களுக்கு அதிகமாக வியர்க்கும், சீக்கிரமே உடலில் துர்நாற்றம் வீசத் தொடங்கும்.

அப்படியென்றால் என்ன செய்வது?

புது துணியை எப்போதுமே மைல்டான டிடர்ஜென்ட் அல்லது உப்புத் தண்ணீரில் 15-20 நிமிடம் ஊறவைத்து துவைத்து விடுங்கள். டார்க் கலர் துணிகளை தனியாக துவைப்பது நல்லது, ஏனென்றால் முதல் முறை சாயம் போகும். துவைத்த பின் வெயிலில் நன்றாக காயவைத்து உடுத்துங்கள். உள்ளாடைகள் மற்றும் குழந்தைகளின் துணிகளுக்கு இந்த விதியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒருமுறை துவைப்பது, நாள் முழுவதுமான பாதுகாப்பை தரும். புது துணியின் சந்தோஷத்தை, ஆரோக்கியமாக கொண்டாடுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Gas Tube: உங்க வீட்டு கேஸ் டியூப் வாங்கி எத்தனை வருஷமாச்சி? இப்பவே செக் பண்ணுங்க!
Recommended image2
Nalangu Maavu: சோப்புக்கு குட்பை... நலங்கு மாவுக்கு வெல்கம்! வீட்டிலேயே செய்வது எப்படி?
Recommended image3
வாடகை வீட்டில் 12 ஆண்டுகள் இருந்தால் அது உங்களுக்கே சொந்தமாகுமா? சட்டம் சொல்லும் உண்மை இதுதான்!
Related Stories
Recommended image1
USA Rules: அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கூடாதா? காரணம் தெரிஞ்சா சிரிப்பே வந்துடும்!
Recommended image2
Dress Buying Tips: புது டிரெஸ் வாங்கும்போது Size மட்டும் பாக்காதீங்க.. இந்த விஷயங்களையும் Check பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved