தினமும் பருப்பு சாப்பிடலாமா? என்னென்ன பிரச்சனைகள் வரும்?
பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன? தினமும் பருப்பு சாப்பிடலாமா?

சத்துக்கள் நிறைந்த பருப்பு
பலவிதமான பருப்புகளை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். இவற்றின் மூலம் பல சத்துக்கள் கிடைக்கின்றன. பருப்பில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
வாயு தொல்லை
அதிகமாக பருப்பு சாப்பிடுவதால் வாயுத் தொல்லை, சிறுநீரகப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம். பருப்பில் உள்ள ஃபைடேட் என்ற பொருள் கால்சியம் உறிஞ்சுதலைக் குறைக்கலாம். யூரிக் அமில அளவும் அதிகரிக்கலாம்.
மிதமான அளவு
அதிக உப்பு, எண்ணெய் சேர்த்து பருப்பு சமைத்தால் உடல் நலக் கேடு ஏற்படலாம். எனவே மற்ற உணவுகளை போலவே பருப்பையும் அளவாக சாப்பிடுவது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.