- Home
- Lifestyle
- Custard Apple: நீரழிவு நோயாளிகளுக்கு சீத்தாப்பழம் உகந்ததா..? மிஸ் பண்ணாம தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..
Custard Apple: நீரழிவு நோயாளிகளுக்கு சீத்தாப்பழம் உகந்ததா..? மிஸ் பண்ணாம தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..
Custard Apple: சீத்தாப்பழம் இனிப்பாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இவற்றை சாப்பிட கூடாது என்கின்ற கருத்து பரவலாக உள்ளது. இதைப் பற்றி சுகாதார வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

Custard Apple:
சீத்தாப்பழம் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதன் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இந்த பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகுக்கும் நன்மை பயக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
Custard Apple:
சீத்தாப்பழத்தில் இருக்கும் சத்துக்கள்:
இந்த பழங்களில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது தசை பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இந்த பழம் பல நாள்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்கள் கொண்டதாக கருதப்படுகிறது.
Custard Apple:
இந்த பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். குறிப்பாக கருச்சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது. இந்த பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆஸ்துமா தாக்குதலை குறைக்க உதவுகிறது.
Custard Apple:
ஆனால், இந்த பழம் மிகவும் இனிப்பாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் சீத்தாப்பழத்தை சாப்பிடலாம் என்கின்றனர்.
Custard Apple:
இந்த பழங்களை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. ஏனெனில் இது குறைந்த ஜிஐ (கிளைசெமிக் இண்டெக்ஸ்) கொண்டுள்ளது. சீத்தாப்பழத்தில் பாலிஃபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 20 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
இதில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து மறைமுகமாக இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. அதுமட்டுமின்று, எடை குறைவால் அவதிப்படுபவர்களுக்கு சீத்தாப்பழம் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஜூஸாக செய்து அதனுடன் பாலும் தேனும் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
Custard Apple:
எடை குறைவால் அவதிப்படுபவர்களுக்கு சீத்தாப்பழம் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஜூஸாக செய்து அதனுடன் பாலும் தேனும் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். பிரசவத்திற்குப் பிறகு அதிக எடையிலிருந்து விடுபடவும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்தப் பழங்களில் உள்ள மக்னீசியம் மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.
Custard Apple:
இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது. மேலும், இந்த பழம் கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. இப்பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்தசோகை பிரச்சனையை குணப்படுத்தும். இந்த பழத்தை சாப்பிடுவதால் பல் சொத்தை மற்றும் பல் வலி குறைகிறது.