- Home
- Lifestyle
- Curry Leaves: கறிவேப்பிலை 2 நாளில் கருப்பாகி அழுகிடுதா? மாதக்கணக்கில் ஃப்ரெஷ்ஷாக வைக்க இதோ 4 சூப்பர் டிப்ஸ்!
Curry Leaves: கறிவேப்பிலை 2 நாளில் கருப்பாகி அழுகிடுதா? மாதக்கணக்கில் ஃப்ரெஷ்ஷாக வைக்க இதோ 4 சூப்பர் டிப்ஸ்!
Fridge: சமையலின் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வாங்கி வந்த சில நாட்களிலேயே கருப்பாகி அழுகிவிடுகிறது. இந்நிலையில் கறிவேப்பிலையை மாதக்கணக்கில் எப்படி வாடாமல், நிறம் மாறாமல் ஃப்ரெஷ்ஷாகச் சேமிப்பது என்பதற்கான சூப்பர் டிப்ஸ்.
கறிவேப்பிலை சீக்கிரம் கெட்டுப்போவக காரணம்
கறிவேப்பிலை சீக்கிரம் கெட்டுப்போவதற்குக் முக்கியக் காரணம் அதன் இலைகளில் தங்கும் அதிகப்படியான ஈரப்பதம் (Moisture) தான். இலைகளைக் கழுவிய பின் சரியாகக் காயவைக்காமல் ஃபிரிட்ஜில் வைத்தால், அந்தத் தண்ணீரிலேயே இலைகள் அழுகத் தொடங்கிவிடும்.
ஏர்-டைட் டப்பா முறை
கறிவேப்பிலையை காம்பிலிருந்து தனியாக பிரித்து நன்கு கழுவுங்கள். ஒரு காட்டன் துணியில் பரப்பி, ஈரம் போக காய வையுங்கள். இப்போது ஒரு ஏர்-டைட் டப்பாவின் அடியில் டிஷ்யூ பேப்பர் வைத்து, அதன் மேல் காய்ந்த இலைகளைப் போடுங்கள். மேலே மற்றொரு டிஷ்யூ பேப்பர் வைத்து மூடினால், வாரக்கணக்கில் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
லேசாக வதக்கும் முறை
இலைகளைக் கழுவி காய வைத்த பிறகு, ஒரு நான்-ஸ்டிக் பேனில் 1-2 நிமிடங்கள் லேசாக வதக்குங்கள் (இலைகள் அதிகம் காயக்கூடாது, ஈரப்பதம் போனால் போதும்). இதை ஒரு ஏர்-டைட் டப்பாவில் போட்டு வையுங்கள்.
ஜிப்லாக் பை மற்றும் கிச்சன் டவல்
உங்களிடம் பாக்ஸ் வைக்க இடமில்லை என்றால், இலைகளை ஒரு கிச்சன் டவல் அல்லது பேப்பரில் சுற்றி, ஜிப்லாக் பைக்குள் காற்றுப் போகாமல் பேக் செய்து ஃபிரிட்ஜில் வையுங்கள். இதுவும் கறிவேப்பிலை கருப்பாகாமல் தடுக்கும். இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ செய்து, மார்க்கெட்டில் வாங்கும் கறிவேப்பிலையை மாதக்கணக்கில் பயன்படுத்தி பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
ஐஸ் க்யூப் முறை
இலைகளைக் கழுவி காய வைத்து, ஐஸ் ட்ரேயின் ஒவ்வொரு குழியிலும் சில இலைகளைப் போடுங்கள். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி ஃப்ரீசரில் வையுங்கள். கறிவேப்பிலை ஐஸ் க்யூப் ஆனதும், அதை எடுத்து ஒரு ஜிப்லாக் பையில் போட்டு வையுங்கள். சமைக்கும்போது ஒரு க்யூப் எடுத்து சாம்பாரிலோ அல்லது தாளிப்பிலோ நேரடியாகப் பயன்படுத்தலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

