- Home
- Lifestyle
- கமல்பட பாணியில் கட்டிப்பிடி வைத்தியம்! லட்ச கணக்கில் கல்லா கட்டும் இளைஞர்... குவியும் மக்கள் கூட்டம்!
கமல்பட பாணியில் கட்டிப்பிடி வைத்தியம்! லட்ச கணக்கில் கல்லா கட்டும் இளைஞர்... குவியும் மக்கள் கூட்டம்!
ஒருவரை கட்டிப்பிடித்து தங்களுடைய அன்பை பரிமாறிக்கொள்ளும் பழக்கம் நம்மிடம் இருந்தாலும், இதனை மருத்துவ ரீதியாக ஒருவர் செய்து வருவது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Vasool Raja MBBS
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான 'வசூல் ராஜா MBBS' படத்தில், கமல் ஒருவரது மன அழுத்தம், மற்றும் கவலைகளை மறக்க செய்ய கட்டிப்பிடி வைத்தியம் என்பதை செய்வார். அப்போது அது புதுமையாக பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதே கட்டிப்பிடி வைத்தியத்தை சினேகன் செய்தபோது கடும் விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 30 வயதே ஆகும் Trevor Hooton என்பவர் 'கட்டிப்பிடி வைத்தியத்தை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். அன்புக்காகவும், அரவணைப்பிற்காகவும், ஏங்குபவர்கள் மன அழுத்தத்தை கட்டிப்பிடி வைத்தியம் குறைப்பதாக கூறும் Trevor Hooton கடந்த சில மாதங்களாக பிரிஸ்டலில், எம்ப்ரஸ் கனெக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை தொடர்ந்து செய்து வருகிறார்.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்படுகிறது.. விக்ரம், மணிரத்னத்துக்கு வக்கீல் நோட்டீஸ்!
இந்த கட்டிப்பிடி சிகிச்சையை செய்துகொள்ள, ஆண்கள் முதல் பெண்கள் வரை குவிந்து வருகிறார்கள். இந்த வைத்தியத்திற்காக Trevor ஒரு மணி நேரத்திற்கு 7000 ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இவர் செய்து வரும் இந்த பணி குறித்து பெரும்பாலும் பலருக்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பலர் தவறுதலாக தன்னை புரிந்து கொள்வதாகவும், சிலர் அதை பாலியல் வேலை என்று நினைப்பதாகவும் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வித்தியாசமான முயற்ச்சியை தான் மேற்கொண்டு வருவதற்கான முக்கிய காரணம் மனித தொடர்புகளை உருவாக்குவதற்காகவே என்றும், இந்த சிகிச்சை மேற்கொள்ள வருபவர்கள் சிலருக்கு முதலில் சங்கடமாகவே இருக்கும், காரணம் யார் என்றே தெரியாத ஒரு நபர் கட்டிப்பிடிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே அவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப அரவணைப்பு முறை வழங்கப்படுவதாக Trevor Hooton தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: ரக்சன் - ராஜலட்சுமியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 3 முக்கிய பிரபலங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்..!
மேலும் இந்த கட்டிப்பிடி வைத்தியத்தில் யாரேனும் பாலுறவின் தொடக்கத்தை உணர துவங்கினால் அதில் இருந்து தான் பின்வாங்கி விடுவதாகவும், இது பாலுறவு அல்லாத உணர்வாக இருக்க வேண்டும் என்றே தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
பாசம், அரவணைப்பு, போன்றவற்றை இதன் மூலம் வழங்குவது மட்டும் இன்றி... மற்றவர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள சிரமப்படும் மக்களுக்கு உதவ கனெக்ஷன் கோச்சிங் என்ற சேவை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இவரது இந்த வித்தியாசமான முயற்சியும், கட்டிப்பிடி வைத்தியம் குறித்த தகவலும், சில புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: லலித் மோடியுடன் டேட்டிங்.. விரைவில் திருமணமா? ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு உண்மையை போட்டுடைத்த சுஷ்மிதா சென்