- Home
- Lifestyle
- Yawning : அடிக்கடி கொட்டாவி வருதா? இதுல அலட்சியம் காட்டாதீங்க! முக்கிய அறிகுறியா இருக்கும்
Yawning : அடிக்கடி கொட்டாவி வருதா? இதுல அலட்சியம் காட்டாதீங்க! முக்கிய அறிகுறியா இருக்கும்
எந்தவித காரணமும் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால், அது ஒரு சில பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

Reasons for Frequent Yawning
நம்முடைய உடல் அலுப்பாக இருக்கும் போது அல்லது சோர்வாக இருக்கும் போது அல்லது ஓய்வு தேவை என்பதை உணர்த்தும் அறிகுறி தான் கொட்டாவி. ஆனால் எந்தவொரு காரணமும் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால் அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏதேனும் பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம். அப்படி உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிகப்படியான சோர்வு மற்றும் தூக்கம் இல்லாமை :
நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை நீங்கள் நன்றாக தூங்கிப் பிறகும் உங்களுக்கு அளவுக்கு அதிகமாக கொட்டாவி வருகிறது என்றால் உங்கள் உடலானது ரொம்பவே சோர்வாக இருக்கிறது என்று அர்த்தம்.
ரச்சனை உள்ளவர்களும் அடிக்கடி அதிகமாக கொட்டாவி விடுவார்கள்.
தூக்க கோளாறுகள்
தூக்கு கோளாறுகளும் அதிகப்படியான கொட்டாவியை ஏற்படுத்தும். மேலும் தூக்கத்தின் போது மூச்சு விடுவதில் சிரமப்படுபவர்கள் பகல் நேரத்தில் எப்போதுமே தூக்கு கலக்கத்துடனே காணப்படுவார்கள். அவர்கள் அடிக்கடியும் கொட்டாவி விடுவார்கள். அதுபோல தூக்க கோளாறை ஏற்படுத்தும் நார்கோலெப்சி எந்தப் பி
மன அழுத்தம் மற்றும் பதட்டம்
மன அழுத்தம் மற்றும் பதட்டம் கொட்டாவியை உருவாக்கும். எப்படியெனில், நாம் அதிகப்படியான டென்ஷனில் இருக்கும்போது நமது உடலானது அதை சமாளிக்க ஆழமான மூச்சுக்கள், ஆக்சிஜன் உள்ளெடுப்பை அதிகரிக்க முயற்சி செய்யும். அந்த சமயத்தில் மூன்று சுழற்சியை கட்டுப்படுத்த மன அழுத்தத்தை குறைக்க கொட்டாவி வரும். எனவே மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்களுக்கு கொட்டாவி வருகிறது என்றால் உங்களது மன அழுத்தத்தை நீங்கள் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
உடல்நல பிரச்சனைகள்
சில உடல்நலக் கோளாறுகள் காரணமாகவும் அடிக்கடி கொட்டாவி ஏற்படும். அதிகப்படியான கொட்டாவி வருதல் இதயம் சார்ந்த நோய் மற்றும் நரம்பு கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். எனவே எந்த காரணமும் இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால் அதை அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
மருந்துகளின் விளைவு
ஒரு சில மருந்துகளின் காரணமாகவும் அடிக்கடி கொட்டாவி வரலாம். குறிப்பாக நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடிய மருந்துகள் விளைவாலும் அடிக்கடி கொட்டாவி ஏற்படும் அதுபோல புதிய மருந்துகள் சாப்பிட்டாலும் உங்களுக்கு கொட்டாவி வரும்.