Magnesium Foods: நல்லா தூக்கம் வரணுமா? நைட்ல இந்த மெக்னீசியம் உணவுகளை சாப்பிடுங்க!
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த மெக்னீசியம் ரொம்ப முக்கியம். ராத்திரி தூக்கம் வராம கஷ்டப்படுறீங்களா? அப்போ மெக்னீசியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க. இது உங்களுக்கு நல்ல ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும்.
15

Image Credit : Getty
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் மெக்னீசியம், ஜிங்க் மற்றும் டிரிப்டோபான் சத்துக்கள் உள்ளன. இவை செரோடோனின், மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து, நல்ல உறக்கத்திற்கு உதவுகின்றன.
Add Asianetnews Tamil as a Preferred Source

25
Image Credit : Getty
கீரை
கீரை போன்ற பச்சைக் காய்கறிகளில் மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
35
Image Credit : Getty
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. இது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
45
Image Credit : Getty
பாதாம்
பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, தூக்கத்தைக் கெடுக்கும் கார்டிசோல் ஹார்மோனையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
55
Image Credit : Getty
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இது தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்களை உற்பத்தி செய்து, நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

