MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பாகற்காய் கசப்புனு தெரியும்.. ஆனா இப்படி சமைத்தால் துளி கூட கசக்காது!!!

பாகற்காய் கசப்புனு தெரியும்.. ஆனா இப்படி சமைத்தால் துளி கூட கசக்காது!!!

Bitter Gourd Benefits : பாகற்காய் உடலுக்கு பல நன்மைகளை செய்தாலும், சில உணவுகளுடன் அதனை சாப்பிடக்கூடாது. என்னென்ன உணவுகளுடன் பாகற்காய் சாப்பிடக்கூடாது, யார் பாகற்காயை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த பதிவில் விடை காணலாம். 

3 Min read
Author : Kalai Selvi
Published : Sep 27 2024, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Bitter Gourd Benefits In Tamil

Bitter Gourd Benefits In Tamil

பாகற்காயை கண்டால் பலர் தெறித்து ஓடுவார்கள். பாகற்காயை உண்ண குழந்தைகள் மட்டுமல்ல, பெரியோரும் தயக்கம் காட்டுவார்கள். அதன் சுவை கசப்பாக இருந்தாலும், அதில் உள்ள சத்துக்கள் அபாரமானவை. இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இது முக்கியமான காயாகும். 

பாகற்காய் என்றாலே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது தான் எல்லார் நினைவுக்கும் வரும். ஆனால் அதைத் தாண்டியும் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அந்த சத்துக்கள் என்னென்ன? எவற்றுடன் பாகற்காயை சாப்பிடக் கூடாது உள்ளிட்ட பல தகவல்களை இங்கு காணலாம். பாகற்காயை பச்சையாகவும், சமைத்தும் உண்ணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Bitter Gourd Benefits In Tamil

Bitter Gourd Benefits In Tamil

பாகற்காயின் சத்துக்கள்: 

பாகற்காயின் சத்துக்கள் அதை பச்சையாக சாப்பிடும்போதும், சமைத்து சாப்பிடும்போதும் வேறுபடும்.  பாகற்காயில் 32 வகையான வேதி உள்ளடக்கங்கள் உள்ளன. ஒரு கப் அல்லது 130 கிராம் சமைத்த பாகற்காயை உண்பதன் மூலமாக 53.3 கலோரிகள் கிடைக்கும். புரதச்சத்து: 1.07 கிராமும், கொழுப்பு 3.52 கிராமும் காணப்படுகிறது.

கார்போஹைட்ரேட் அளவு 5.45 கிராம், சர்க்கரையின் அளவு 2.46 கிராமாக உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்தில் 2.47 கிராம் கிடைக்கிறது. பாகற்காய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி அதிகமுள்ள காய். ஒரு கப் பாகற்காயில் 41.5 கிராம் வைட்டமின் சி கிடைக்கிறது. இதில் வைட்டமின் பி9 சத்தின் இயற்கை வடிவமான ஃபோலேட் காணப்படுகிறது. இதுவே நம்முடைய செல்கள் வளர உதவும் வைட்டமினாகும். 

36
Bitter Gourd Benefits In Tamil

Bitter Gourd Benefits In Tamil

பாகற்காயின் நன்மைகள்:  

இரத்த சர்க்கரையை  கட்டுப்படுத்த பாகற்காய் உதவும். பாக்டீரியாக்களால் ஏற்படும் சில நோய்த்தொற்றுகளையும் எதிர்த்துப் போராட பாகற்காய் உதவுகிறது .

பாகற்காய் சாற்றை குடிப்பது புற்றுநோய்க்கு எதிராக போராட உதவும். கருப்பை, தோல், எலும்பு மஜ்ஜை, மார்பகம், புரோஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட பாகற்காய் உதவும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.   

பாகற்காயில் உள்ள சில புரதங்கள் வளர்சிதை மாற்றக் கோளாறுகளைத் தடுக்கிறது என சொல்லப்படுகிறது. வளர்சிதை மாற்ற கோளாறுகள் இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றில் ஆரோக்கியமற்ற நிலையை ஏற்படுத்தும். இதை தடுக்க பாகற்காய் உண்ணலாம். 

பாகற்காய் ஜூஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமுள்ளது. இது முகப்பருவை நீக்க உதவுகிறது. 
 
இதய நோய்கள், உடல் பருமன், சிறுநீரக பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது .

46
Bitter Gourd Benefits In Tamil

Bitter Gourd Benefits In Tamil

எந்த உணவுகளுடன் பாகற்காய் உண்ணக் கூடாது?
 
வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழங்கள் ஆகிய பழங்களுடன் பாகற்காய் சாப்பிடக் கூடாது. 
 
பாகற்காயுடன் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும். பால், தயிர் அல்லது சீஸ் போன்றவையுடன் பாகற்காய் உண்பது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 
 
கிராம்பு, இலவங்கப்பட்டை அல்லது ஜாதிக்காய் மசாலாப் பொருட்களுடன் பாகற்காய் உண்ணக் கூடாது. 

மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சியுடன் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 
 
தக்காளி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் அமில உணவுகளாகும். இதனுடன் பாகற்காய் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

எந்த உணவுகளுடன் பாகற்காய் உண்ணலாம்? 

பாகற்காய், நெல்லிக்காய் சாறு இரண்டும் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். இதனை அவ்வப்போது குடிப்பதால் உடல் சுத்தமாக இருக்கும். 

பாகற்காயின் கசப்பை மட்டுப்படுத்தி இனிப்புச் சுவையைச் சேர்க்க பூசணிக்காயைப் பயன்படுத்தலாம். 

பாகற்காய் கசப்பு நீங்க! 

பாகற்காயில் உள்ள கசப்பினை குறைத்தால் சாப்பிட நன்றாக இருக்கும். அதற்கு பாகற்காயை இரவு முழுக்க உப்பு நீரில் ஊறவைக்கலாம். காலையில் அதனை கழுவலாம். இதனை சமைக்கும்போது கசப்பு ரொம்ப தெரியாது. 

56
Bitter Gourd Benefits In Tamil

Bitter Gourd Benefits In Tamil

ஒரு நாளைக்கு எவ்வளவு பாகற்காய் உண்ணலாம்? 

பாகற்காயைஉங்களுடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்கென சில வரம்புகள் உண்டு. குறிப்பிட்ட அளவிற்கு மேல் பாகற்காய் உண்பதால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சுகர் நோயாளிகள் பாகற்காய் பொடியாக எடுத்தால் ஒரு நாளில்  3 முதல் 15 கிராமுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது. பாகற்காய் ஜூஸாக அருந்தினால் 100 முதல் 200 மி.லி. தான் ஒரு நாளின் லிமிட். 

பாகற்காயின் பக்க விளைவுகள்: 

மருத்துவர் பரிந்துரையின் படி குறிப்பிட்ட அளவு நீங்கள் பாகற்காயை சாப்பிட்டு வந்தால் அதனால் பலன்கள் கிடைக்கும். ஆனால் அளவுக்கு மீறி உட்கொண்டு வந்தால் பக்க விளைவுகள் ஏற்படும். செரிமான கோளாறுகள், அஜீரணம், வயிற்றுப்போக்கு, இரைப்பை புண்கள், சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படலாம். வாரத்தில் ஒரு நாள் சமைத்து சாப்பிடுவது பிரச்சனையில்லை. தினமும் பாகற்காய் எடுத்துக் கொள்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். 

66
Bitter Gourd Benefits In Tamil

Bitter Gourd Benefits In Tamil

யார் சாப்பிடக்கூடாது?

பாகற்காய் நல்ல பலன்களை கொண்டிருந்தாலும் சிலருக்கு தீமையை உண்டாக்கலாம். கருவுற நினைக்கும் பெண்கள், பாலூட்டும் பெண்கள் பாகற்காயை தவிர்க்க வேண்டும். 

பி-கிளைகோபுரோட்டீன் மூலக்கூறு மருந்துகளை சாப்பிடுபவர்கள் பாகற்காயை தவிர்க்கலாம்.  

விரதம் இருப்பவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், உடல் பலவீனமானவர்கள் தவிர்க்கலாம். ஏனென்றால் பாகற்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதனால் உங்களுக்கு மயக்கம் ஏற்படலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved