- Home
- Lifestyle
- Sugar Cravings : இனிப்பு உணவு சாப்பிடுற ஆசையை கட்டுக்குள் வைக்க உதவும் குளிர்கால உணவுகள்!!
Sugar Cravings : இனிப்பு உணவு சாப்பிடுற ஆசையை கட்டுக்குள் வைக்க உதவும் குளிர்கால உணவுகள்!!
குளிர்காலத்தில் அதிகரிக்கும் இனிப்பு ஆசையால் உடல் எடை கூடும். எடையைக் குறைக்கும்போது இனிப்பு ஆசையைக் கட்டுப்படுத்த உதவும் சில ஆரோக்கியமான உணவுகள் இங்கே.

Foods That Reduce Sugar Cravings
குளிர்காலத்தில் எடை குறைப்பது கடினம். ஏனெனில் இனிப்பு மீதான ஆசை அதிகரிக்கும். இந்த ஆசையை கட்டுப்படுத்தவும், எடை குறைக்கவும் உதவும் சில ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி இங்கு காணலாம்.
1. சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
நார்ச்சத்து நிறைந்தது, பசியைக் கட்டுப்படுத்தும். இனிப்பு ஆசையை குறைக்கும்.
2. பேரீச்சம்பழம்:
இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து கொண்டது. உடலுக்கு ஆற்றல் தந்து இனிப்பு ஆசையை கட்டுப்படுத்தும்.
3. நட்ஸ் & விதைகள்:
ஆரோக்கிய கொழுப்புகள், புரதம் நிறைந்தது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
4. சீதாப்பழம்: இயற்கையான இனிப்பு சுவை கொண்டது.
5. இலவங்கப்பட்டை: இரத்த குளுக்கோஸை கட்டுப்படுத்தும். இனிப்பு ஆசையை குறைக்கும்.
6. டார்க் சாக்லேட்:
சிறிதளவு சாப்பிட்டால் இனிப்பு ஆசையைக் கட்டுப்படுத்தலாம்.
7. ஓட்ஸ்: இதில் உள்ள நார்ச்சத்து எடை குறைப்பிற்கு உதவும்.
8. யோகர்ட்: புரோட்டீன், புரோபயாடிக் நிறைந்தது. குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

