- Home
- Lifestyle
- Salt Purification : உப்புல கூட நச்சுக்கள் இருக்கும் தெரியுமா? உப்பை சுத்தம் செய்யும் சிறந்த வழி இதுதான்!!
Salt Purification : உப்புல கூட நச்சுக்கள் இருக்கும் தெரியுமா? உப்பை சுத்தம் செய்யும் சிறந்த வழி இதுதான்!!
உப்பில் உள்ள நச்சுக்களை நீக்க முன்னோர் பின்பற்றிய எளிய வழிமுறையை இங்கு காணலாம்.

உப்பு இல்லாத வீடுகளை காண்பது முடியாத காரியம். ஏனென்றால் உணவுக்கு உப்பு அடிப்படையான விஷயமாக உள்ளது. அதிக உப்பு உடலுக்கு ஆபத்து என்றாலும் அளவான உப்பு உடலை பராமரிக்க உதவுகிறது. சரியான அளவு எப்படி முக்கியமோ அதைப் போல சுத்தமான உப்பை எடுத்துக் கொள்வதும் அவசியம். முன்னோர் உப்பை நேரடியாக பயன்படுத்தாமல் அதை சுத்திகரித்து பயன்படுத்தியுள்ளனர். உப்பில் உள்ள நச்சுக்களை நீக்க முன்னோர் பின்பற்றிய எளிய வழிமுறையை இங்கு காணலாம்.
பலரும் பயன்படுத்த சுலபமாக இருக்கும் பொடியான தூள் உப்பைதான் வாங்குகிறார்கள். ஆனால் பொடி உப்பு என்பது கல் உப்பை பொடித்து தயாரிப்பது கிடையாது. இந்த உப்பில் சுத்திகரிப்புக்காக பல ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் நம் முன்னோர் பயன்படுத்தியது கல் உப்பு. கல் உப்பை அப்படியே பயன்படுத்தாமல், நன்கு வறுத்து பயன்படுத்தும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது.
உப்பை அந்த காலத்தில் பண்டமாற்று முறையில் தான் வாங்கினார்கள். மூட்டைகளில் உப்பை வணிகர்கள் நேரடியாக சந்தையில் விற்பது வழக்கமாக இருந்தது. இந்த கல் உப்பை அம்மியில் பொடித்து தூள் உப்பாக பயன்படுத்துவார்கள். அப்படியே கல் உப்பாகவும் பயன்படுத்துவார்கள். ஆனால் அதற்கு முன் சுத்தம் செய்வார்கள். எப்படி? ஏன்? என்ற கேள்வி எழுகிறதா? உப்பு தயாரிக்கும் உப்பளங்கள் எந்தளவு சுத்தமாக இருந்திருக்கும் என்பது நாம் அறியாதது.
உப்பை பயன்படுத்தும் முன் அதிலுள்ள தேவையில்லாத நச்சுக்களை நீக்க சில முறைகள் வழக்கத்தில் இருந்துள்ளன. உப்பளங்களில் உப்பை தயாரித்த பின் அதை வெள்ளையாக்க கெமிக்கல் ப்ளீச்சிங் செய்வார்கள். பின்புதான் பாக்கெட்களில் அடைக்கப்படும்.
இந்த ரசாயனங்களின் நச்சு தன்மை நீங்க முருங்கை இலை அல்லது சங்கு புஷ்ப இலைகளை பயன்படுத்தலாம். நீங்கள் அடி கனமான இரும்பு கடாயில் 1 கிலோ கல் உப்பு, அதனுடன் காம்புகளுடன் முருங்கை இலை அல்லது சங்கு புஷ்ப இலைகளை போட வேண்டும். ஒரு கிலோவுக்கு சுமார் 25 கிராம் அளவில் இலைகள் சேர்த்தால் போதும். குறைந்த தீயில் அதை வறுக்க வேண்டும். உப்பின் ஈரத்தன்மை நீங்கி உப்பு பொரியும் வரைக்கும் வறுக்க வேண்டும். நன்கு வறுபட்ட பின்னர் ஆற வைத்து ஜாடி அல்லது பாட்டிலில் சேமித்து வையுங்கள்.
இதைப் போல மிளகைக் கூடு போட்டு மிதமான தீயில் உப்பை வறுக்கலாம். உண்மையில் உப்பை வறுத்து பயன்படுத்தினால் அதில் உள்ள ஈரப்பதம் நீங்கும். ஏதேனும் விஷத்தன்மை இருந்தால் நீங்கிவிடும். கண்டிப்பாக பின்பற்றுங்கள்.