மழைக்காலத்தில் துணி காய வேண்டுமா? அப்ப இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க.!!
மழைக்காலத்தில் துணிகளை எளிய முறையில் காய வைக்க உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன..

நாம் அனைவரும் துணிகளை துவைத்து மடித்து வைப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளோம்.அதுவும் வெயில் காலத்தில் துணிகளை துவைத்தால் அது ஈசியாக காய்ந்து விடும். ஆனால் மழைக்காலம் என்றால் சொல்லவே வேண்டாம் துணிகளை காய வைப்பது மிகவும் சவாலான விஷயமாகும்.
மழை காலத்தில் துணிகளை காய வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில் காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். வெயில் அடித்தாலும் கூட துணிகளை காய வைக்கலாம் என்று நினைத்தால் மீண்டும் மழை வந்துவிடும். கரட்ட பாக்காத அப்போ எப்படி தான் துணிகளை மழைக்காலத்தில் காய வைக்க வைப்பது என்று நினைக்கிறீர்களா? அந்த வகையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வழிகள் உங்களுக்கு உதவும்.
முதலில் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நன்றாக துணியை பிளந்து காய போடுங்கள். இதனால் துணி காற்றில் உலரும். மேலும் துணி காயும் நேரமும் கட்டாயம் குறையும்.
இதையும் படிங்க: எச்சரிக்கை.. மழைக்காலத்தில் நீர் மூலம் பரவும் ஆபத்தான நோய்கள்.. எப்படி தடுப்பது?
அது போல் மிதமான சூட்டில் ஈரமான துணியை அயன் செய்யலாம். இந்த முறையை நீங்கள் பின்பற்றும் போது துணியில் நீர் வடியக் கூடாது. சிறிது மட்டும்தான் ஈரம் இருக்க வேண்டும்.
ஹேர் ட்ரையரை பயன்படுத்தி துணிகளை காய வைக்கலாம் தெரியுமா? ஆம் ஹேர் ட்ரையரை நீங்கள் கூல் செட்டிங்கில் வைத்து துணிகள் மீது காட்டி காய வைக்கலாம். இதனால் துணி எளிதில் காய்ந்து விடும்.
உங்கள் வீட்டில் டேபிள் ஃபேன் இருந்தால், அவற்றில் இருந்து வரும் காற்று துணிகள் மீது படும்படி வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் துணி சீக்கிரம் காய்ந்து விடும்.
இதையும் படிங்க: மழைக்கால நோய்களிலிருந்து உங்கள் குழந்தையை பாதுகாக்க, இதை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க..
உங்கள் வீட்டில் டீஹ்யுமிடிஃபையர் (dehumidifier) இருந்தால் அவற்றை பயன்படுத்தி துணியில் இருக்கும் ஈரப்பதத்தை நீக்கலாம். இது மிகவும் சுலபமான வழியாகும்.