MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • summer tips கோடையில் எந்த கலரில், என்ன ஆடை உடுத்தினால் ஜில்லென இருக்கலாம்?

summer tips கோடையில் எந்த கலரில், என்ன ஆடை உடுத்தினால் ஜில்லென இருக்கலாம்?

வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது "என்ன டிரஸ் போட்டாலும் வேர்க்குதே" என்று கவலைப்படுபவரா? இதோ உங்களை ஸ்டைலாகவும் அதே சமயம் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள சில ஃபேஷன் ரகசியங்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும் ஜில்லென வைத்துக் கொள்ள சில சூப்பரான ஐடியாக்கள்

1 Min read
Author : Priya Velan
Published : May 09 2026, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கலர் ரொம்ப முக்கியம்:
Image Credit : Getty

கலர் ரொம்ப முக்கியம்:

வெயிலில் கருப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது என்பது நமக்குத் தெரியும். ஆனால் எந்த நிறம் சிறந்தது? வெள்ளை நிறம் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் என்பது உண்மைதான். ஆனால், இளஞ்சிவப்பு (Powder Pink), வெளிர் நீலம் (Sky Blue) மற்றும் புதினா பச்சை (Mint Green) போன்ற 'பேஸ்டல்' (Pastel) நிறங்கள் உங்கள் கண்களுக்கும், உடலுக்கும் அதிக குளிர்ச்சியைத் தரும். வெளிர் மஞ்சள் நிறம் கோடையில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைத் தரும். இது வெப்பத்தை உள்வாங்காது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
துணி ரகத்தில் கவனம் தேவை :
Image Credit : Getty

துணி ரகத்தில் கவனம் தேவை :

வெறும் காட்டன் (Cotton) மட்டும் போதாது. இன்னும் சில ஆப்ஷன்கள் இங்கே:

லினன் (Linen): இது இயற்கையிலேயே காற்றோட்டமானது. வியர்வையை உடனடியாக உறிஞ்சி, உங்களை உலர்வாக வைத்திருக்கும். கொஞ்சம் சுருக்கம் விழுந்தாலும் அதுதான் இதன் தனி ஸ்டைல்!

மூங்கில் துணி (Bamboo Fabric): இப்போது டிரெண்டிங்கில் இருப்பது இதுதான். இது இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்புத் திறன் கொண்டது மற்றும் வியர்வை வாடையைத் தடுக்கும்.

முல்முல் (Mulmul): மென்மையான முல்முல் காட்டன் ஆடைகள் உடலுக்கு மென்மையான உணர்வைத் தரும்.

Related Articles

Related image1
Fashion Tips : உங்க சரும நிறத்திற்கு ஏத்த ஆடைகள் எதுனு தெரியுமா? இப்படி 'ட்ரெஸ்' பண்ணா தாழ்வு மனப்பான்மையே வராது!
Related image2
Summer Fashion: கோடை வெயிலில் காற்றோட்டமாக இருக்கணுமா.. சூப்பரான 6 டிரெஸ் டிரை பண்ணுங்க!
35
ஃபிட்டிங்கில் இருக்கு ரகசியம் :
Image Credit : Getty

ஃபிட்டிங்கில் இருக்கு ரகசியம் :

லூஸ் ஃபிட் (Loose Fit): இறுக்கமான ஜீன்ஸ் அல்லது டி-ஷர்ட்களை அலமாரியில் மூட்டை கட்டி வையுங்கள். காத்தாட இருக்கும் 'ஓவர்சைஸ்' (Oversized) சட்டைகள் மற்றும் 'பலாசோ' (Palazzo) பேன்ட்களைத் தேர்வு செய்யுங்கள். ஆடைக்கும் சருமத்திற்கும் இடையில் காற்று புகுந்து விளையாடினால் தான் உடல் சூடாகாமல் இருக்கும்.

45
இந்த விஷயங்களை மறக்காதீங்க!
Image Credit : Getty

இந்த விஷயங்களை மறக்காதீங்க!

கோடையில் சிந்தெடிக் உள்ளாடைகளைத் தவிர்த்து 100% பருத்தி ஆடைகளை மட்டுமே அணியுங்கள். கனமான நகைகளைத் தவிர்த்து, மரத்தாலான மணிகள் அல்லது துணியால் ஆன நகைகளை (Fabric Jewelry) அணியலாம். இது சரும எரிச்சலைத் தடுக்கும்.

55
ஒரு ஸ்பெஷல் டிப் :
Image Credit : Getty

ஒரு ஸ்பெஷல் டிப் :

நீங்கள் அணியும் ஆடைகளைத் துவைக்கும் போது, கடைசி அலசலில் சில துளிகள் வெட்டிவேர் ஊறவைத்த நீரையோ அல்லது புதினா ஆயில் (Peppermint oil) சேர்த்தோ அலசுங்கள். நாள் முழுவதும் உங்கள் ஆடை நறுமணத்துடனும், ஒருவித குளிர்ச்சியுடனும் இருக்கும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஃபேஷன்
ஆடைகள்
கோடைக்காலம்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mosquitoes: கெமிக்கல் ஸ்ப்ரே இனி தேவையில்லை.. கொசுக்களை தெறித்து ஓடவைக்கும் 4 செடிகள் இதோ!
Recommended image2
Gift Idea For Mother: அம்மாவுக்கு கிஃப்ட்! 500 ரூபாய்க்குள் அசத்தலான 5 ஐடியாஸ்... பட்ஜெட்ல அம்மாவை ஹேப்பியாக்குங்க!
Recommended image3
நீண்ட நேரம் நிலைத்திருக்கும் கண் இமை அலங்காரம்: எளிய அழகு குறிப்புகள்
Related Stories
Recommended image1
Fashion Tips : உங்க சரும நிறத்திற்கு ஏத்த ஆடைகள் எதுனு தெரியுமா? இப்படி 'ட்ரெஸ்' பண்ணா தாழ்வு மனப்பான்மையே வராது!
Recommended image2
Summer Fashion: கோடை வெயிலில் காற்றோட்டமாக இருக்கணுமா.. சூப்பரான 6 டிரெஸ் டிரை பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved